வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்த பிரபல நடிகர் தன் வறுமை நிலை குறித்து கண்ணீர் மல்க பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் கிங்காக தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார். பின் இடையில் சில பிரச்சனைகளால் சில ஆண்டுகாலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

வடிவேலு படங்களில் நடிக்காமல் போனதில் இருந்து அவருடன் நடித்த பல நடிகர்களும் வாய்ப்பு இல்லாமல் தான் தவித்து வருகின்றனர். அந்த வகையில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருபவர் நடிகர் வெங்கல் ராவ். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் சினிமா வாழ்க்கையில் சுமார் 25 வருடமாக ஃபைட் மாஸ்டராக இருந்தவர். பின்னர் உடல் ஒத்துழைக்காததால் நடிப்பு பக்கம் வந்துவிட்டார்.
வெங்கல் ராவ் நடித்த படம்:
‘நீ மட்டும்’ படம் மூலம் இவர் முதல் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சமீபகாலமாக இவர் படங்களில் காணவில்லை. இந்நிலையில் நடிகர் வெங்கல் ராவ் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியிருப்பது,
வெங்கல் ராவ் அளித்த பேட்டி:
நான் ஆந்திராவைச் சேர்ந்தவன். சினிமாவில் பைட் மாஸ்டர் ஆக தான் நான் நுழைந்தேன். அதற்கு பிறகு என்னால் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியாமல் போனது. எனக்கு உடம்புக்கு முடியவில்லை. அதற்கு பிறகு தான் வடிவேல் சாரை சந்தித்து எனக்கு வாய்ப்பு கேட்டேன். உடனே அவரும் என்னைப் பார்த்துவிட்டு வாய்ப்பு தந்தார். வடிவேல் அண்ணா இல்லை என்றால் நான் இங்கு இப்ப இந்த நிமிடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது. என் வாழ்க்கையில் பெரும் உதவி செய்தவர் வடிவேல் அண்ணா.
என் சிங்கம் களமிறங்கி விட்டது:
அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவர் என்னை மட்டுமில்லாமல் என்னைப்போல் பல பேரை வாழ வைத்திருக்கிறார். இப்போது அவர் சினிமாவில் இல்லாதது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நானும் அவரிடம் போய் வாய்ப்பெல்லாம் கேட்கவில்லை. ஆனால், என் சிங்கம் இப்போது வரப்போகிறது. இனிமேல் எனக்கு கவலை இல்லை. என் சிங்கம் வந்த உடனே நானும், என்னை போன்று இருக்க பலரும் சினிமாவில் நடிக்க வந்து விடுவோம். அதேபோல் நான் யாரிடமும் காசு பணம் கேட்கவில்லை.
பட வாய்ப்பு கேட்ட வெங்கல் ராவ்:
எங்களுக்கும் பட வாய்ப்பு கொடுங்கள் நாங்கள் உழைத்து முன்னேறுகிறோம் என்று தான் சொல்கிறேன் என்று உணர்ச்சிவசமாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது வடிவேல் அவர்கள் பல வருடங்களுக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.