படத்தின் கதையை சொல்லிவிட்டு மாரி செல்வராஜ் அந்த ஒரு கண்டிஷனதான் போட்டார் – மாமன்னன் குறித்து வடிவேலு.

0
1398
Vadivelu
- Advertisement -

இந்த படத்தில் எனக்கு போட்ட ஒரே கண்டிஷன் இது தான் என்று மாமன்னன் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் வடிவேலு கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இதனைத்தொடர்ந்து இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார். மேலும், இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜுக்கு உதயநிதி அவர்கள் மினி கூப்பர் காரை பரிசளித்திருக்கிறார்.

மாமன்னன் படம் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் கிருத்திகா உதயநிதி அவர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.
மேலும், தமிழில் இந்த படம் வெற்றி அடைந்தது தொடர்ந்து தெலுங்கிலும் மாமன்னன் படத்தை வருகிற 14-ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாமன்னன் படம் வெற்றி அடைந்தது அடுத்து சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழாவை பட குழுவினர் நடத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மாமன்னன் படம் வெற்றி விழா:

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால், இயக்குனர் மாரி செல்வராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் வடிவேலு கூறியது, இந்த கதையில் எனக்கு நடிக்க நிறைய வாய்ப்பு இருந்தது. நகைச்சுவைக்கு வாய்ப்பு இல்லை. இந்த படத்துக்கு முழுக்க முழுக்க மாமன்னன் மாரி செல்வராஜ் தான். இப்படிப்பட்ட கதையை பெரும் பொருட்செலவில் உருவாக்க முன் வந்த உதயநிதி மன்னாதி மன்னன். நான் ஒரு சாதாரண குறுநில மன்னன். இந்த படத்தில் 30 படம் பண்ண ஒரு இயக்குனரின் அனுபவத்தை மாரி செல்வராஜிடம் பார்த்தேன்.

படம் அனுபவம் குறித்து வடிவேலு சொன்னது:

வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்டு பட்டினி, பசியாக இருந்து போராடி வந்தவர் மாரி. கிட்டத்தட்ட நானும் அப்படித்தான். அதற்காக சம்பளம் வாங்குற இல்ல என்று கேட்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. மாரி செல்வராஜின் வலியை அழகாக வெளியில் சொல்லி இருக்கிறார். அந்த வலி மக்களுக்கு ரொம்ப கனெக்ட் ஆகும். அவருடைய வலியுடன் சேர்த்து மத்தவங்களுடைய வலியும் இப்படத்தில் இணைந்தது. எனக்கு சிரிக்க கூடாதுன்னு கண்டிஷன் போட்ட படம். இந்த படம் தான் எனக்குள் ஒரு போட்டி வந்துவிட்டது. காமெடி பண்ற வடிவேலுக்கும் சீரியஸான வடிவேலுக்கும் ஒரு சின்ன சேலஞ்ச். எந்த இடத்திலும் சிரிக்கக்கூடாது என்று போராடினேன். படம் முழுக்க அதையே தொடர்ந்தேன் என்று கூறியிருந்தார்.

Advertisement