முதல்வர் ஸ்டாலினின் பயோபிக்கில் அவர்தான் நடிக்கணும், அவரை கட்டாயப்படுத்துவோம் – வடிவேலு அதிரடி

0
336
- Advertisement -

முதல்வர் ஸ்டாலின் பயோபிக் படத்தில் உதயநிதி நடிக்கணும் என்று அவரை வடிவேலு கட்டாயப்படுத்தி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பல போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக கடந்த 2021ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதல்வர் பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின். இவரின் செயல்பாடுகள் குறித்து பல்வேரு பிரபலங்களால் பாரட்டப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

சமீபத்தில் அவரது 70 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவருடைய பிறந்தநாள் குறித்து எல்லோரும் தங்களின் வாழ்த்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். மேலும், முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் “எங்கள் முதல் எங்கள் பெருமை” என்ற புகைப்பட கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அவரை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பல சினிமா பிரபலங்கள் என பலர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

- Advertisement -

கண்காட்சி குறித்து வடிவேலு சொன்னது:

குறிப்பாக கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் அவருடன் காமெடி நடிகர் யோகி பாபுவும் சமீபத்தில் பார்வையிட்டனர். அந்த வகையில் தற்போது நடிகர் வடிவேலும் கண்காட்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டு இருக்கிறார். அவருடன் அமைச்சர் மூர்த்தியும் சென்றிருந்தார். மேலும், கண்காட்சியை பார்வையிட்ட வடிவேல் அவர்கள் புகைப்படங்களையும் எடுத்து இருக்கிறார். இதனை அடுத்து வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அப்போது அவர், இங்கு பார்த்த படம் எல்லாம் வெறும் படம் அல்ல.

ஸ்டாலின் பயோபிக் குறித்து சொன்னது:

எல்லாம் உண்மை. என் நெஞ்செல்லாம் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இது எல்லா மனிதர்களுக்கும் தைரியம், தன்னம்பிக்கை கொடுக்கும் புகைப்பட கண்காட்சியாக இருக்கிறது. பல போராட்டங்களை கடந்த பின்னர் தான் இந்த இடத்திற்கு முதலமைச்சர் ஆகி இருக்கிறார் ஸ்டாலின். ஒரு கலைஞராகத் தான் புகைப்பட கண்காட்சியை பார்வையிட வந்திருந்தேன். நடிகராக வரவில்லை. அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலினுடைய வாழ்க்கை பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும். ஆனால், உதயநிதி நடிக்க மாட்டேன் என்று கூறினார். இருந்தாலும், அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைப்போம் என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

வடிவேலு திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக காமெடியில் கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இவர் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் வடிவேலு தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

வடிவேலு நடிக்கும் படங்கள்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் வடிவேலு நடித்து இருந்தார். சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. வடிவேலு நடிக்கும் படம். தற்போது வடிவேலு அவர்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

Advertisement