சின்மயி போட்ட டிவீட்டால் ரத்தானதா வைரமுத்துவின் டாக்டர் பட்டம் ?அழைப்பிதழில் கூட பெயர் இல்லையே.

0
8631
Chinmayi-vairamuthu
- Advertisement -

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். பாடகி சின்மயி கூறி இருந்த குற்றச்சாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு “வீழ மாட்டோம்” ஆல்பம் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது வைரமுத்து சார்பாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் பாடகி சின்மயி கூறும் இந்த குற்றச்சாட்டு உண்மை இருக்கிறதா என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவிற்கு தனியார் பல்கலை கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வழங்குவதாக இருந்தது. இந்த பட்டத்தை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் வழங்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அழைப்பிதழ் வெளியானது.

ஆனால், வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கூடாது என்று சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமான பதிவு ஒன்றை செய்திருந்தார். மேலும், அந்த பதிவில் 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம். கவுரவ டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின் மொழி ஆளுமைத்திறனுக்காக வழங்கப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் தரலாம். உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க. வெல்டன் தனியார் பல்கலைக்கழகம் என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் அளிப்பதாக இருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமீபத்தில் வெளிவந்துள்ள புதிய அழைப்பிதழில் வைரமுத்து மற்றும் ராஜ்நாத் சிங் பெயர்கள் இடம்பெறவில்லை . எனவே வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் கொடுப்பது ரத்தாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வைரமுத்து இந்த டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்து விட்டதாகவும் ஒரு கருத்து சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மேலும், இதனை உறுதி செய்யும் வகையில் வைரமுத்துவின் டாக்டர் பட்டம் ரத்தானது என்பது சந்தோசமான விஷயம் தான் என்று ட்வீட் செய்யப்பட்டிருந்த பதிவை சின்மயி லைக் செய்தும் இருக்கிறார்.

Advertisement