பிக் பாஸ்ல உங்கள தப்பா நினைச்சிட்டேன். மதுமிதாவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ள கவின் பட தயாரிப்பாளர்.

0
22357
kavin Madhumitha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பெண் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மதுமிதா. இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக ஜாங்கிரி என்று தான் அழைப்பார்கள். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் பூகம்பம் கிளம்பியது. அதிலும் நடிகை ஜாங்கிரி மதுமிதா விஷயம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகை மதுமிதா அவர்கள் தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நீங்க Twins-ஆ. சித்ரா பதிவிட்ட புகைப்படத்தால் குழம்பி போயுள்ள ரசிகர்கள்.

இதனால் நடிகை மதுமிதாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். பின்னர் வெளியே வந்தவுடன் மதுமிதா அவர்கள் பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் தன்னை குரூப் ராகிங் செய்து என்னை தற்கொலை முயற்சிக்கு தூண்டி விட்டார்கள் என்று கோபமாக பேசினார். இது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது நடிகை மதுமிதா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து நடிகை மதுமிதா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் டுவிட்டரில் பிக்பாஸ் நிகழ்ச்சி மதுமிதா குறித்து கருத்து கூறியுள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் தெரிவித்து இருப்பது, நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்த போது நடிகை மதுமிதா குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தேன். ஆனால், அவரைப் பற்றி நேரில் சந்தித்து தெரிந்து கொண்ட பிறகு தான் அவருடைய நல்ல குணங்கள் என்ன என்பது எனக்கு புரிந்தது. யாரையும் டிவியில் காண்பிப்பதை வைத்து அவருடைய குணத்தை சொல்ல முடியாது. உண்மையாலுமே நடிகை மதுமிதா அவர்கள் நல்ல குணம் உடையவர்கள். என்னுடைய அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்து உள்ளேன் என்று கூறியுள்ளார். இதற்கு மதுமிதா அவர்களும் ட்விட்டரில் நன்றி தெரிவித்து உள்ளார். தற்போது இவர்கள் பதவிட்ட ட்விட்டர் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்திரன் கவின் நடித்த ‘நட்புனா என்ன தெரியுமா’ படத்தை தயாரித்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement