அந்த வரி கொஞ்சம் கீழே இருக்கே, அதை ஏன் ஓகே சொன்னிங்க’ன்னு கேட்டார் – கட்டிப்புடி கட்டிப்புடி பாடல் ரகசியம் சொன்ன வைரமுத்து.

0
1011
- Advertisement -

குஷி திரைப்படத்தில் கட்டிபுடி கட்டிபிடி பாடலை எழுதிய வைரமுத்து அது குறித்து தற்போது கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து பின்னர் ஹீரோவான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரான எஸ் ஜே சூர்யாவும் ஒருவர். எஸ் ஜே தமிழில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார். அதிலும் இவர் இயக்கிய குஷி மற்றும் வாலி திரைப்படங்கள் வேற லெவலில் வெற்றிபெற்றது. வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் விஐய்யை வைத்து குஷி படத்தை இயக்கி இருந்தார். வாலி படத்தை போன்று இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்திற்கு தேவா தான் இசையமைத்து இருந்தார். விஜய் படங்களில் முதன் முறையாக அதிக வசூல் செய்தது இந்த திரைப்படம் தான். இந்த திரைப்படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டுகளை பெற்றது. குஷி படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமையாகவே இருக்கும். அந்த வகையில் வைரமுத்து எழுதிய கட்டிபிடி கட்டிபிடி டா பாடல் இந்த திரைப்படம் ஹீட் ஆவதர்ற்கு முக்கிய காரணமாகவே இருந்தது. அந்த பாடல் எழுதிய விதம் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து தற்போது தெரிவித்துள்ளார்

- Advertisement -

வைரமுத்து கூறியது:

இசையமைப்பாளர் தேவா எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர். அவர் ரொம்ப அன்பானவர். ரொம்ப ரசிகர் ரொம்ப மரியாதையோடு நடந்து கொள்வார். குஷி படத்திற்கு பாடல் எழுதி முடித்த பின் தேவா ஒரு நாள் என்னை அழைத்தார். அது ஒரு கமர்சியல் சாங் பண்ணனும் சார் என்று என்னை அழைத்தார். அதற்கு நான் இதுவரை பண்ணுவதெல்லாம் கமர்சியல் சாங் கிடையாதா என்று கேட்டேன். கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலுக்கு சும்மா டம்மியாக இரண்டு லைன் எழுதி வைத்திருந்தேன். அது இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ரொம்ப பிடித்து போயிருந்தது. நீங்கள் தவறாக எண்ணவில்லை என்றால் நாங்கள் அந்த பாடலை அப்படியே வைத்துக் கொள்ளலாமா என்று தேவா என்னிடம் கேட்டார்.

அதன் பின் அந்த பாடலை தேவா பாடினார். அதன்பின் நான் ஓகே இந்த படம் இப்படியே செய்யுங்கள் என்று கூறி விட்டு வந்து விட்டேன். அதன்பின் நான் காரில் வரும்போது என்னுடைய உதவியாளர் அந்த வரி கொஞ்சம் கீழே இருக்கு அதை ஏன் ஓகே சொல்லிவிட்டீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் அதைவிட இன்னும் கீழாக என்னால் எழுத முடியாது என்று சொன்னேன். அந்தப் பாடலில் வரும் முதல் தொடக்கப் பல்லவிகளை நான் எழுதவில்லை. என்னுடைய வரிகள் எல்லாம் பார்த்தீர்கள் ஆனால் ஆக்சிஜன் இல்லாமல் இமயமலை ஏறாதே.

-விளம்பரம்-

கற்பனை இல்லாமல் கட்டில் மேல் சேராது அப்படி என்று அந்த பாடல் நான் எழுதியிருப்பேன். அது எல்லாம் கொஞ்சம் கவித்துவமாக இருக்கும் இதெல்லாம் என்ன தெரியுமா. வாழ்க்கையில் எல்லோரும் எல்லா அம்சங்களும் வேண்டி இருக்கிறது. இந்தப் புனிதம் ஒரு பக்கம் இந்த கொண்டாட்டம் ஒரு பக்கம் இந்த கேளிக்கை ஒரு பக்கம் வேடிக்கை ஒரு பக்கம் எல்லாம் சேர்ந்த சமூகத்தில் இதற்கு ஒரு பங்கு இருக்கும். நான் இதை நியாயப்படுத்த விரும்பவில்லை ஆனால் புரிந்து கொள்கிறேன். வாழ்க்கையில் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியும் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது ஆனால் அதை புரிந்து கொள்ள முடியும் என்றும் கவிஞர் வைரமுத்து கூறியிருந்தார்.

Advertisement