அவர் சொல்றது சுயநலம் சிறிய பட்ஜட் படங்கள் குறித்து விஷால் சொன்ன கருத்திற்கு மேற்கு தொடர்ச்சை மலை பட இயக்குனர் பதிலடி.

0
957
Lenin
- Advertisement -

சின்ன பட்ஜெட் படங்கள் குறித்து விஷால் கூறிய சர்ச்சை கருத்துக்கு இயக்குனர் லெனின் பாரதி கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது. இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் விஷால் சிறு பட்ஜெட் படங்கள் குறித்து பேசி இருந்தது தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதற்கு பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் லெனின் பாரதி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் லெனின் பாரதி பேட்டி:

அதில் அவர், எல்லா பெரிய நடிகர்களுமே நூற்றுக்கணக்கான கோடிகளில் லாபம் பார்ப்பது தான் சினிமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புரிதல் மிகவும் தவறான ஒன்று. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் தியேட்டரிலும் ஓடிடியிலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள் தான் நல்ல கதைகளத்துடன் இருக்கின்றது. நடிகர்களை சார்ந்து படம் வெற்றி பெறுவது கிடையாது. சமூகத்திற்கு தேவையான சுதந்திரமான கருத்துக்களை சொல்லி மக்களுடன் உரையாடுவது அதிகம் சின்ன பட்ஜெட் படங்கள் தான்.

சின்ன பட்ஜெட் படங்கள் நிலைமை:

அந்த வகையில் அயலி வெப் சீரிஸ் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது தான். ஆனால், மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்தது. அதில் எந்தவித ஹிரோஷமும், ஆபாசமும் வன்முறையும் கிடையாது. நல்ல கதைகள் மக்களிடம் கண்டிப்பாக தானாகவே போய் சேர்ந்து விடும். மக்களும் நல்ல கதைகளுக்காக தான் ஏக்கத்தோடு இருக்கிறார்கள். ஆனால், மார்க்கெட்டுக்கு ஏற்ற மாதிரி 100 கோடிகளில் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் நல்ல கதைகளை கொடுப்பதில்லை. நல்ல கதைகளில் நடிப்பதும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை நல்ல சம்பாதித்து கொண்டே போகணும் என்பதுதான். அவர்களுடைய நோக்கம். சினிமாவை காப்பாற்றுகிற எண்ணமும் சமூகப் பொறுப்பும் கிடையாது.

-விளம்பரம்-

சின்ன பட்ஜெட் படங்கள் :

சமீப காலமாகவே பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வீடியோ கேம் பார்க்கிற மாதிரி தான் இருக்கிறது. வன்முறை, பழி வாங்குதல், பெண்களை போதைப் பொருளாக சித்தரிப்பு போன்ற எண்ணங்களை அதிகமாக மக்கள் மத்தியில் விதைத்துக் கொண்டே வருகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும். இதற்கு முன்னாடி எல்லாம் இப்படி கிடையாது. மொத்தமாக திரையரங்குகளை வாங்குவதால் தான் சின்ன பட்ஜெட் படங்கள் ஓரங்கட்டப்படுகிறது. அனைத்து தியேட்டரிலும் ஒரே படம்தான் போடுகிறார்கள். இந்த நிலைமை மாறனும். ஆனால் யாரும் அதை மாறுவதற்கான முயற்சி எடுப்பதில்லை. அதே மாதிரி எல்லா ஆட்சியாளர்களின் காலகட்டிலும் ஒரு சில தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

பெரிய நடிகர்கள் படம் குறித்து சொன்னது:

இப்போ ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனத்திற்கு நிறைய தியேட்டர்கள் கையில் இருக்கிறது. எல்லா விதமான படங்களை கொடுக்க வேண்டும். அது நல்ல படமா பெரிய படமா என்பதை எல்லாம் பார்வையாளர்கள் தான் முடிவு செய்யணும். நீங்க இப்ப படம் எடுக்க வரீங்கன்னு விஷால் சொல்றது சிறிய முதலாளிகளையும் நசுக்குவது மாதிரி இருக்கிறது. அதேபோல் பெரிய படங்கள் எப்போதும் பண்டிகை காலங்களில் தான் வரும். இடைப்பட்ட காலங்களில் திரைத்துறையில் தினம் கூலியாக பணியாற்றும் தொழிலாளர்கள் வாழ்வை காப்பாற்றுவது சிறு பட்ஜெட் படங்கள் தான். சினிமாவை கலைநோக்கத்தோடு பார்க்காமல் பிசினஸ் ஆக மாற்றி விட்டார்கள். இதை மாறினால் தான் சினிமா நிரந்தரமாக இருக்கும் என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

Advertisement