இளையராஜா பற்றிய கேள்விக்கு ஆவேசமாக வைரமுத்து கொடுத்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார்.

மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். அதன் பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார்.
நிகழ்ச்சியில் வைரமுத்து சொன்னது:
இருந்தாலும், பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், இதை எல்லாம் வைரமுத்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் வைரமுத்து சர்ச்சையில் இருக்கிறார். அதாவது, சமீபத்தில் நடந்த படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து, சமீப காலமாக இசை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்ற பிரச்சனை தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது.
இசையும், பாடல் வரிகளும் சேர்ந்தால் தான் நல்ல பாடல் உருவாகும்.
வைரமுத்து சொன்ன சர்ச்சை கருத்து:
சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக இருக்கிறது. இசையை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருப்பது தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதை பார்த்த பலருமே இவர் இசைஞானி இளையராஜாவை தான் மறைமுகமாக விமர்சித்து பேசி இருக்கிறார் என்று விவாதங்கள் எழுப்பி இருந்தார்கள். இது குறித்து கங்கை அமரன், எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போல பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி வேண்டும்.
வைரமுத்து அளித்த பேட்டி:
இளையராஜா குறித்து சின்ன குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஆவேசமாக பேசியிருந்தார். இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் வைரமுத்து கூறியது, இந்த செய்திகளை நீங்கள் தவிர்க்க விரும்ப மாட்டீர்கள் என்கிறீர்கள். நான் எந்த ஒரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உண்டாக்க விரும்பவில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன. அதில் இருந்து நான் வெளியேறிய விரும்புகிறேன். ஆனால், காலம் சர்ச்சைகளை ஒழிப்பதற்கு விரும்பவில்லை என்பது தெரிகிறது.
சர்ச்சைகள் குறித்து கொடுத்த விளக்கம்:
சமூகம் சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டு குளிர் காய்கிறது. ஆனால், தனிமனிதர்கள் சர்ச்சையில் இருந்து தள்ளி இருக்க விருப்பப்படுகிறார்கள். நான் தமிழோடு இருக்க நினைக்கிறேன் சர்ச்சைகளில் இருந்து விலக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து உங்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பிரச்சனை முடிந்தால் படத்தில் நல்ல பாடல்கள் வர வாய்ப்பிருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு வைரமுத்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சிறந்த பாடல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இதை நீங்கள் பதிவு செய்யக் கூடாதா என்று பதில் அளித்திருக்கிறார்.