இமான்-சிவகார்த்திகேயன் விவகாரம் தொடர்பாக வலைப்பேச்சு குழுவினர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இமான்- சிவகார்த்திகேயன் குறித்த சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில் இமான், மனம் கொத்தி பறவை படத்தில் தான் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை.
இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது என்பது கஷ்டமான விஷயம். காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. இதை குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும். அந்த வலியும் வேதனையும் ரொம்ப அதிகமாகவே இருக்கிறது என்று கூறி இருந்தார். இந்த விவகாரம் குறித்து பலர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் கூறி இருந்தார்கள்.
இமான்-சிவகார்த்திகேயன் சர்ச்சை:
இதற்கு இமானின் முன்னாள் மனைவி மோனிகா, சிவகார்த்திகேயன் ரொம்ப டீசன்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. நட்பு என்ற அடிப்படையில் எங்கள் குடும்பத்தின் மேல் சிவகார்த்திகேயன் அக்கரையாக இருப்பார். சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று தான் இமான் துரோகம் செய்தாரு என்று சொன்னது எனக்கு புரியுது. ஆனால், அதை வெளியில் வேற மாதிரி புரிஞ்சுகிறார்கள் என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக கூறி இருந்தார். இதை அடுத்து பலருமே இமானுக்கு ஆதரவாகவும், சிவகார்த்திகேயனை பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார்கள்.
வலைப்பேச்சு சொன்னது:
அதையெல்லாம் சிவகார்த்திகேயன் கண்டுகொள்ளவும் இல்லை, விளக்கமும் கொடுக்கவில்லை. குறிப்பாக, யூடியூபில் பிரபல சேனலான வலைப்பேச்சு குழுவினர் ஆரம்பத்தில் பெயரை சொல்லாமல் இமான்- சிவகார்த்திகேயன் இடையே நடந்த விவகாரம் குறித்து பேசி இருந்தார்கள். இமான் வெளிப்படையாக சொன்ன உடன் சிவகார்த்திகேயனை தாக்கி விமர்சித்து பேசி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் யூடியூப்பில் இருந்து இமான் பேசிய வீடியோவை நீக்க சிவகார்த்திகேயன் இணைய கூலிப்படைகளை வைத்து வேலையெல்லாம் செய்தார் என்றெல்லாம் கூறப்பட்டது. இதை ப்ளூ சட்டை மாறனுமே கூறியிருந்தார். ஆனால், எதற்குமே சிவகார்த்திகேயன் பதில் விளக்கம் கொடுக்கவில்லை.
Manusha 🅱️undayada Neelam chaikk @Siva_Kartikeyan 🤮🤮💦💦pic.twitter.com/YTsahSl8SY
— ROLEX (@_Suriya18) September 9, 2024
வலைப்பேச்சு குழுவினர் பேட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் வலைப்பேச்சு குழுவினரிடம், சிவகார்த்திகேயனுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எப்படி வெளியில் பேசலாம் ? இது நியாயமா? என்று கேட்டதற்கு, வலைப்பேச்சு என்பது யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது கிடையாது. வலைப்பேச்சு உடைய கொள்கையும் அது கிடையாது. நாங்கள் மக்களுடைய யூகத்திற்கு கொண்டு சென்று விடுவோம். இப்படி இருக்கலாமா என்று அவர்களே முடிவெடுக்கும் வகையில் சொல்வோமே தவிர யாரையும் தனிப்பட்ட விஷயத்தை குறித்து பேசியதில்லை. சிவகார்த்திகேயன் விஷயத்தில் பேசுவதற்கு காரணம், இமான் தன்னை அறியாமல் எமோஷனலாக உண்மையை சொல்லிவிட்டார்.
சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது :
உடனே சிவகார்த்திகேயன், அந்த வீடியோவை டெலிட் பண்ண சொல்லி முதலில் பொறுமையாக பேசிவிட்டு ,
பின் மிரட்டுவது போல பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அவர் மிரட்டி இருந்தார் . இதை இமான் எங்களுக்கு போன் செய்து தொடர்பு கொண்டார். அவருக்கு ஆதரவாக இருக்கும் வகையில் தான் நாங்கள் சிவகார்த்திகேயனை பற்றி பேசினோம். பாதிக்கப்பட்டவர் என்ற நோக்கில் தான் நாங்கள் இமான் பக்கம் நிற்க முடிவெடுத்து சிவகார்த்திகேயனை பற்றி பேசினோம் தவிர மற்றபடி ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச எங்களுக்கு எந்த ஒரு விருப்பமும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.