விஜய் செய்த வேலையால் வருத்தத்தில் யுவன்- கோட் பாடல் ட்ரோல்கள் குறித்து வலைப்பேச்சு அந்தணன்

0
289
- Advertisement -

‘கோட்’ பாடலுக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து யுவன் சங்கர் ராஜா கூறியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருந்தது.

-விளம்பரம்-

லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே கோட் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் மூன்றாவது பாடல் வெளியானது.

- Advertisement -

கோட் படத்தின் மூன்றாவது பாடல்:

இப்பாடலுக்கு ‘ஸ்பார்க்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் விருஷா பாலு இணைந்து பாடி இருக்கிறார்கள். பின், இந்தப் பாடலுக்கு கங்கை அமரன் வரிகள் எழுதி இருக்கிறார். மேலும், இந்தப் பாடலில் விஜய் மிகவும் இளமையான தோற்றத்தில் உள்ளவாறு காட்டியிருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. மேலும், யுவன் சங்கர் ராஜா விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுப்பதில் மட்டும் ஏமாற்றுவதில்லை என்று பல விமர்சனங்கள் வந்தது.

அந்தணன் பேட்டி:

உண்மையாகவே இந்த பாடலுக்கு யுவன்தான் இசையமைத்தாரா என்பது போல் கமெண்ட்கள் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன், நான் முதல் முறையாக கோட் படத்தின் மூன்றாவது பாடலை கேட்கும் பொழுது, எனக்கும் பிடிக்கவில்லை. ஆனால், இரண்டு மூன்று முறை கேட்ட பிறகு அந்தப் பாடல் எனக்கு பிடித்து விட்டது. இந்தப் பாடல் குறித்து மக்கள் கடுமையான விமர்சனங்கள் முன் வைத்திருக்கிறார்கள். அவை எல்லாமே இசையமைப்பாளர் யுவனிடம் சென்று அடைந்து விட்டது. இந்த விஷயத்தில் அவர் மிகவும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம்.

-விளம்பரம்-

யுவன் சங்கர் ராஜா வருத்தம்:

இதுபோல் ஒரு விமர்சனத்தை யுவன் சங்கர் ராஜா இதுவரை பார்த்தது கிடையாது. இதில் அவருடைய நியாயத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். அதாவது ஒரு சூழ்நிலையை கொடுத்து ஒரு டியூனை போட சொல்கிறார்களாம். அந்த டியூனை போட்டு யுவன், வெங்கட் பிரபுவுக்கு அனுப்பினால், அவர் அதை விஜய்க்கு அனுப்புகிறாராம். கடைசியில் ட்யூனை செலக்ட் செய்வது விஜய் என்கிறார்கள்.

விஜய் தேர்ந்தெடுத்த டியூன்:

மேலும், யுவன் சங்கர் ராஜா கொடுத்த ஐந்து டியூன்களில் இந்த ட்யூன் நன்றாக இருக்கிறது என்று விஜய் தான் சொன்னாராம். எனவே விஜய் சொன்னது தான் நான் செய்து இருக்கிறேன், ஆனால் உலகம் என்னை குறை சொல்கிறது என்று யுவன் சங்கர் ராஜா வருத்தப்படுகிறாராம். மேலும், நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ படத்தில் யுவனின் இசை நன்றாக அமைந்திருந்தது. அதற்குக் காரணம் அவரை ஃப்ரீயாக வேலை செய்ய விட்டார்களாம். அதுபோல், யுவனை ஃப்ரீயாக விட்டால் தான் அவரால் நன்றாக மியூசிக் போட முடியும் என்று யுவன் தரப்பில் கூறியதாக, வலைப்பேச்சு அந்தணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement