'கோட்' படத்தில் விஜயகாந்த் காட்சி குறித்த சர்ச்சைக்கு வலைப்பேச்சு அந்தணன் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் பின் விஜயகாந்தினுடைய பணியை பாராட்டி ‘பத்மபூஷன்’ விருது சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு அறிவித்து இருந்த நிலையில், அவரின் மறைவுக்கு பின்பு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்.

மேலும், விஜயகாந்த்க்கு ‘பத்மபூஷன்’ விருது வழங்கியதற்கு ரசிகர்கள், தேமுதிக தொண்டர்களும் பலருமே வாழ்த்தி சந்தோஷப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தை சுமார் பத்து நிமிட காட்சியில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் படக்குழு பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
விஜயகாந்த் குறித்த தகவல்:
அதேபோல் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் ‘படைத்தலைவன்’ படத்திலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை பயன்படுத்த போவதாக தகவல்கள் கிடைத்தன. சமீபத்தில் இயக்குனர் விஜய் மில்டன் அவர்கள், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாக இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்' படத்திலும் நடிகர் விஜயகாந்தை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து கேப்டனை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த அனுமதி கேட்க வேண்டும் என்று விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா ஒன்றை அறிக்கை விடுத்து இருந்தார்.

பிரேமலதா அறிக்கை:
அந்த அறிக்கையில், தமிழ் திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக செய்திகள் வந்தது. எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் இது மாதிரியான அறிவிப்புகளை வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் கேப்டனை திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கேப்டனின் மனைவி பிரேமலதா தெரிவித்து இருந்தார்.

வலைப்பேச்சு அந்தணன் வீடியோ:
இந்நிலையில் இது தொடர்பாக வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், சமீப காலமாகவே விஜயகாந்த் உடைய காட்சியை ஏ.ஐ மூலம் சரியான அனுமதில் இல்லாமல் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. காரணம், பலருமே விஜயகாந்த் எங்கள் படத்தில் வருகிறார் என்று கூறுகிறார்கள். இது பிரேமலதா அவர்களுக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது. கம்பீரமான, நேர்மையான மனிதரை படத்தில் காண்பிக்கும்போது சரியாக காண்பிக்க வேண்டும். நாங்களும் படத்தில் காண்பிக்கிறோம் என்று அவருடைய காட்சிகளை முறையாக காண்பிக்கவில்லை என்றால் அது தவறானது.
https://www.youtube.com/watch?v=Lfac6N1K3oc&t=30s
சர்ச்சை குறித்து சொன்னது:
இதனால் தான் பிரேமலதா கோபப்பட்டு பேசியிருந்தார். ஆனால், விஜயின் 'கோட்' படத்தில் முறையான அனுமதியுடன் தான் விஜயகாந்த் உடைய காட்சிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த படத்திற்காக பிரேமலதா அவர்களே விஜயகாந்த் வீடியோக்களையும் கொடுத்திருக்கிறார். இதற்கான தகவலும் இருக்கிறது. வெங்கட் பிரபுவும் இது தொடர்பாக பிரேமலதாவை மூன்று முறை சந்தித்து இருக்கிறார். இவ்வளவு தகவல்கள் இருந்தும் பிரேமலதா ஏன் இப்படி சொன்னார்? என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.






