‘வலிமை’ கதை அஜித்துக்காக எழுதிய கதை இல்லை, முதலில் அதில் இப்படி தான் எழுதி இருந்தேன் – எச்.வினோத்

0
379
vinoth
- Advertisement -

வலிமை படத்தின் கதை வேறொரு நடிகருக்கு எழுதியது என இயக்குனர் வினோத் கூறிய தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த படம் அடுத்த வருடம் அதாவது வரும் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள். அதேபோல் ஓர் ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு வலிமை படம் உருவாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் வலிமை படத்தின் இயக்குனர் வினோத் பிரபல தனியார் மீடியாவிற்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

- Advertisement -

அஜித்காக எழுதிய கதை இல்லை :

அதில் அவர் கூறியிருப்பது, இது நான் எழுதிய இரண்டாவது கதை. ஆனால், இது வேறு ஒரு நடிகருக்காக நான் எழுதியது. மேலும், இந்த கதையை முதலில் நான் வேற மாதிரி எழுதி இருந்தேன். அப்போது நான் போலீஸ் கதாபாத்திரமாக எல்லாம் கதை எழுதவில்லை. இன்று இருக்கும் இளைஞர்களுக்கு வரும் பிரச்சனைகள், அவர்களது குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பார்க்கிறோம்.

valimai-story-written-for-another-hero-says-h-vinoth

வலிமை படத்தின் கதை :

அதுபோன்ற இரண்டு பிரச்சனைகளை நான் எடுத்துக் கொண்டு தான் இந்த கதையை உருவாக்கினேன். அந்த பிரச்சினைகள் ஹீரோவின் குடும்பத்தில் ஏற்பட்டால் என்னவாகும்? அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. இதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டு அதை ஒரு பெரிய புதிய கதையாக மாற்றி இயக்கி இருக்கேன். அதேபோல் என்னுடைய பக்கத்திலிருந்து நான் எந்தவொரு சமரசமும் செய்யவில்லை.

-விளம்பரம்-

மேலும், என்னை போன்ற இயக்குனர்கள் ஒரு பெரிய ஸ்டார் உடன் பணியாற்றும் போது பார்வையாளர்களுக்காக படம் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் படத்தில் 10% உழைப்பை கொடுத்தால் போதும் ஒரு பெரிய நடிகரின் படத்தை ரசிகர்கள் கொண்டுபோய் மக்களிடம் சேர்த்து விடுவார்கள். மிரளும், ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்தும் அஜித்துடன் தான் :

இதனை பார்த்த ரசிகர்கள், இது எந்த நடிகருக்காக கதை? எந்த நடிகரை நினைத்து எழுதினீர்கள்? என்று கேட்டு வருகிறார்கள். அதே போல் வலிமை படத்திற்க்கு பின் நடிகர் அஜித்தை வைத்து இன்னொரு படத்தை இயக்க இருக்கிறார். அந்த படம் குறித்து பேசிய வினோத், அந்த படத்தில் ஆக்ஷனை விட வசனங்கள் அதிகமாக இருக்கும்.உலக  அளவில் மக்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகளைப் பேசும் படமாக இருக்கும்’ என்றும் கூறியுள்ளார்.

Advertisement