வலிமை படத்தில் நீக்கப்பட்ட மூன்று நிமிட வீடியோ காட்சி – இத போய் ஏன் நீக்குனாங்க.

0
680
valimai
- Advertisement -

அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சில தினங்களுக்கு முன் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நேர்கொண்ட வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்.

-விளம்பரம்-

இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

வலிமை படம் செய்த சாதனை:

அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் கேரளாவில் வெளியாகி முதல் நாளிலேயே விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முந்தி இருக்கிறது. அதோடு தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 900க்கும் அதிகமான திரையரங்களில் வலிமை படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் ஆகியோர் படங்கள் கூட 700 முதல் 800 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும். ஆனால், வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் ரிலீசாகி தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருட சாதனையை செய்து இருக்கிறது.

வலிமை படத்தின் நீளம் அதிகம்:

மேலும், வலிமை படம் வெளியாகி வசூலில் சாதனை புரிந்து வந்தாலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்களும், சினிமா விமர்சனம் தொடர்ந்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் இரண்டு மணி நேரம் 55 நிமிடத்தில் ஓடும் வலிமை படத்திலிருந்து 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு புதிய வெர்ஷன் வலிமை திரையரங்களில் வெளியானது.

-விளம்பரம்-

வலிமை படத்தின் நிமிடம் நீக்கப்பட்ட காட்சி:

அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் 15 நிமிட காட்சியை நீக்கி உள்ளதாகவும், நாங்க வேற மாதிரி பாடல் காட்சியும் நீக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெறாத மூன்று நிமிட காட்சி வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் 14 நிமிட காட்சிகளை படத்திலிருந்து நீக்கி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் வலிமை படத்திலிருந்து நீக்கப்பட்ட மூன்று நிமிட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

வலிமை படத்தின் நீக்கப்பட்ட மூன்று நிமிட காட்சி:

சொல்லப்போனால், இந்த காட்சி படத்திலேயே இடம்பெறவில்லை. இந்த காட்சியில் வில்லன் கார்த்திகேயா நடித்து இருக்கிறார். இதை முதன் முதலாக சோசியல் மீடியாவில் தான் வெளியிட்டு இருக்கிறார்கள். படத்தின் நீளம் அதிகம் ஆனதால் இந்த காட்சியை படத்தில் காண்பிக்கப்படவில்லை. தற்போது இதை தான் வலிமை படத்தின் நீக்கப்பட்ட மூன்று நிமிட காட்சி என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement