திமுக அமைச்சர் குடும்பத்துக்கு மருமகளாகும் வலிமை பட பிரபலத்தின் மகள் – இவர் யார் தெரியுமா ?

0
724
Valimai
- Advertisement -

வலிமை படம் வினியோகஸ்தர் மகளுக்கும், திமுக அமைச்சர் குடும்பத்துக்கு மகனுக்கும் திருமணம். தற்போது இந்த தகவல் குறித்து சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்த ஒரு நிதியாளர் ஜி என் அன்புச் செழியன். இவர் திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், சினிமா பைனான்சியர், திரையரங்க அதிபர் போன்ற பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் கோபுரம் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தைச் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

ஜி என் அன்புச்செழியன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை ஒரு தலைமையாசிரியர். இவருடைய தந்தை ஓய்வு பெற்ற போது கிடைத்த பணத்தை முதலீடாக கொண்டு தான் தொழிலை தொடங்கினார். முதலில் இவர் சிறு வணிகர்களுக்கு கடன் கொடுத்தார். பின் படிப்படியாக உயர்ந்து கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோகஸதர் நிறுவனத்தை தொடங்கினார். அடுத்தகட்டமாக சினிமா துறைக்கு கடன் கொடுக்க வளர்ந்தார்.

- Advertisement -

விநியோகஸ்தராக உருவான விதம்:

முதன்முதலாக இவர் வானத்தைப் போல படத்துக்கு தான் கடனுதவி அளித்து இருந்தார். அதன் பிறகு படங்களுக்கு கடனுதவி அளித்து பிரபலமான விநியோகஸ்தர் ஆகவும் திகழ்கிறார். தற்போது இவர் வலிமை பட விநியோகஸ்தர் ஆகவும் இருக்கிறார். ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தின் அப்டேட் எல்லாம் சோஷியல் மீடியாவில் அவ்வபோது வெளியாகி வருகின்றது. இந்த படத்தில் முழுக்க முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.

Valimai distributor Anbu Chezhiyan daughter Sushmitha get married to DMK minister family groom Saran, anbu chezhiyan, anbu chezhiyan daughter, anbu chezhiyan net worth, anbu chezhiyan family, anbu chezhiyan son, anbu chezhiyan wife, anbu chezhiyan house, gopuram films anbu chezhiyan, gopuram films owner, sun ias academy, sun ias academy saran, sun ias academy saran marriage, sun ias academy study material, sun ias academy current affairs, sushmitha saran marriage, thangam thennarasu mobile number, thangam thennarasu son, thangam thennarasu community, thangam thennarasu wife, thangam thennarasu minister 2021, thangam thennarasu daughter name, thangam thennarasu mla, thangam thennarasu photos, கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், சன் ஐஏஎஸ் அகாடமி, தங்கம் தென்னரசு, அன்புச்செழியன் மகள், அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா, சரண் சுஷ்மிதா திருமணம், வலிமை, வலிமை ரிலீஸ்

அன்புசெழியன் மகள் சுஸ்மிதா:

மேலும், இந்த படம் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.மேலும், மதுரை அன்பு செழியன் மகள் தான் சுஷ்மிதா. இவர் சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இளநிலைப் பட்டமும் அதைத் தொடர்ந்து எம்பிஏ பட்டமும் படித்திருக்கிறார். தற்போது இவருக்கு இருபத்தி ஐந்து வயது ஆகிறது. இருந்தாலும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நிர்வகித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சுஸ்மிதா கோபுரம் சினிமாஸ் உரிமையாளராகவும் விளங்குகிறார். இப்படி இந்த இளம் வயதில் இவ்வளவு திரையரங்குகளை பராமரித்தும், தயாரிப்பு நிறுவனத்திற்கு உரிமையாளராக இருப்பது பெரிய விஷயம்.

-விளம்பரம்-

சன் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் மகன்:

இது பல இளைஞர்களுக்கு உதாரணம் என்றே கூறலாம். இந்த நிலையில் தயாரிப்பாளர் அன்பு செழியன் அவர்கள் தன்னுடைய மகளை திமுக அமைச்சர் உறவினர் ராஜேந்திரன் மகனுக்கு சம்மதம் பேசியிருக்கிறார். குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் அகடமி நிறுவனங்களில் சன் ஐஏஎஸ் நிறுவனமும் ஒன்று. சன் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தான் ராஜேந்திரன். இவருடைய மகன் தான் சரண். இவர் பிடெக், எம்பிஏ முடித்தவர். அதுமட்டுமில்லாமல் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மைத்துனர் தான் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Valimai distributor Anbu Chezhiyan daughter Sushmitha get married to DMK minister family groom Saran, anbu chezhiyan, anbu chezhiyan daughter, anbu chezhiyan net worth, anbu chezhiyan family, anbu chezhiyan son, anbu chezhiyan wife, anbu chezhiyan house, gopuram films anbu chezhiyan, gopuram films owner, sun ias academy, sun ias academy saran, sun ias academy saran marriage, sun ias academy study material, sun ias academy current affairs, sushmitha saran marriage, thangam thennarasu mobile number, thangam thennarasu son, thangam thennarasu community, thangam thennarasu wife, thangam thennarasu minister 2021, thangam thennarasu daughter name, thangam thennarasu mla, thangam thennarasu photos, கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், சன் ஐஏஎஸ் அகாடமி, தங்கம் தென்னரசு, அன்புச்செழியன் மகள், அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா, சரண் சுஷ்மிதா திருமணம், வலிமை, வலிமை ரிலீஸ்

சுஸ்மிதா- சரண் திருமணம்:

இந்த நிலையில் சுஸ்மிதா- சரண் இருவருக்கும் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற இருக்கிறது. அன்று மாலையே இருவருக்கும் திருமண வரவேற்பும் நடைபெற இருக்கிறது. இப்படி சினிமா, அரசியல் என இருபெரும் வளம் கொண்ட குடும்பங்கள் இணைய இருக்கிறது. இதனால் இவர்களுடைய திருமணத்தில் அரசு அதிகாரிகளும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு பிரம்மாண்டமாக திருமண விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்களுடைய திருமண தேதி தெரிந்தவுடன் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் இவர்களுடைய புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களை கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement