பிரியங்கா வைத்த Whatsapp Dp..! மாற்ற சொன்ன பூமிகா.! ரகசியத்தை உடைத்த வம்சம் நடிகை!

0
365

சன் டிவியில் ஒளிபடப்பான “வம்சம் ” சீரியலில் நடித்த பிரபல நடிகை பிரியங்கா சில நாட்களுக்கு முன்னர் சென்னை வலசரைவாக்கத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Vamsam-Tamil-TV-Serial-Actress-Priyanka

32 வயதாகும் ப்ரியங்காவிற்கு திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை இல்லமால் இருந்ததால் ப்ரியங்காவிற்கும் அவரது கணவர் முனீர் என்பவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் அவரது கணவரை இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பிரியங்காவின் தற்கொலை குறித்து அவருடன் ” வம்சம் ” சீரியலில் நடித்த சீரியல் நடிகை சந்தியா கூறுகையில்”எப்போதும் என்கிட்ட நல்லா பேசும் பிரியங்கா , ஒரு மாசமா ஒரு மாதிரி இருந்தா. கொஞ்ச நாளைக்கு முன்னால அவளோட dp ல ‘i want to die “னு வெச்சிருந்தா. அதனால நான் அவளுக்கு போன் பண்ணி திட்டினா.

எதுக்கு இப்படி dp-ய வெச்சிருக்கனு நான் கேட்டதுக்கு, நாம நேர்ல பாக்கும் போது சொல்றனு சொல்லிட்டா. இதபத்தி அவ ஹஸ்பண்ட் கிட்ட கேட்டப்ப அவ கிட்டயே கேட்டுக்கோங்கன்னு சொல்லிட்டாரு. ஆனா அவள நான் இந்த நிலைமைல பார்ப்பனு கொஞ்சம் கூட நினைக்கல’ என்று கண்ணீர் மழ்க கூறியுள்ளார்.