மனைவியுடன் விபத்தில் சிக்கிய சன் டிவி வானத்தைப் போல சீரியல் பிரபலம். அவரின் தற்போதய நிலை.

0
898
manoj
- Advertisement -

சமீப காலமாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. மேலும், சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்தவரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் வானத்தைப்போல. அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை.

-விளம்பரம்-

இந்த தொடரில் கதாநாயகியாக துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வந்தார் . சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் நடித்து வந்தார். அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி நடித்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களாகவே துளசி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதா சீரியலில் இருந்து விலக போகிறார் என்ற ரூமர்ஸ் பரவிக் கொண்டே இருந்தது. பின் ஸ்வேதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். பின் சீரியலில் இருந்து ஸ்வேதாவை விலகியதை தொடர்ந்து சின்னராசுவாக நடித்து வந்த தமனும் விலகி விட்டார்.

- Advertisement -

சீரியலில் விலகிய நடிகர்கள்:

சினிமாவில் அறிமுகமாகிட்டுத் தான் சீரியல் பக்கமே வந்தார். அதனால் மறுபடியும் சினிமா வாய்ப்பு வந்ததால் சீரியலில் விலகி விட்டார். தற்போது அவருக்கு பதிலாக சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார். இவரும் பல வருடமாக சீரியலில் நடித்து வருகிறார். இவர்களை தொடர்ந்து சமீபத்தில் சீரியலில் இருந்து சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த சங்கரேஸ் விலகி இருக்கிறார். இதை இவரே சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். மேலும், இவருக்கு பதிலாக சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் சந்தோஷ் நடிக்கிறார்.

வானத்தை போல சீரியல் கதை;

இப்படி தொடர்ந்து வானத்தைப்போல சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகிக் கொண்டு வருகிறார்கள். இப்படி பல நடிகர்கள் மாறினாலும் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சென்று கொண்டிருக்கின்றது. தற்போது சீரியலில் துளசி கணவன் குடும்பத்தில் தொழிலில் பல நஷ்டம் அடைவதால் துளசி கணவருக்கு பண நெருக்கடி வருகிறது. இதனால் துளசியின் மாமனார் உன்னுடைய அண்ணன் இடம் இருந்து சொத்து எழுதி வாங்கிக்கொண்டு வா என்று கேட்கிறார். ஆனால், துளசி சொத்து வாங்கி தர வேண்டும் என்றால் என் அண்ணனுடன் இருந்த உறவை முறித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுகிறார்.

-விளம்பரம்-

விபத்தில் சிக்கிய சீரியல் நடிகர்:

அண்ணன் – தங்கை உறவு நீடிக்குமா? மீண்டும் குடும்பம் இணையுமா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வனத்தைபோல சீரியலில் முத்தையாவாக நடித்து வருபவர் இயக்குனர் மனோஜ்குமார். இவர் சென்னை சாலிகிராமத்தில் சேர்ந்தவர். தற்போது இவருக்கு 67 வயதாகிறது. இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை பெற்று வரும் நடிகர் மனோஜ்:

இந்த நிலையில் மனோஜ் குமார் நேற்று காலை மாருதி சுசுகி காரில் தன்னுடைய மனைவி செல்வி, உதவியாளர் ரகுபதி ஆகியோர் உடன் தேனிக்கு புறப்பட்டார். அப்போது காரை ரகுபதி ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் கல்லூரி அருகே காலை 10 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேருமே காயமடைந்து இருக்கின்றனர். பின்னர் அங்குள்ளவர்கள் காயமடைந்த மூவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தீ விபத்தில் சிக்கிய ஸ்ரீகுமார்:

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல் சமீபத்தில் இந்த சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரீகுமார் தன்னுடைய குடும்பத்துடன் தீ விபத்தில் சிக்கிக் கொண்டிருந்தார். சென்னை பாண்டிபஜாரில் இருக்கும் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பிரபல நடிகர் ஸ்ரீ குமார் தனது குடும்பத்துடன் மட்டுமில்லாமல் 70 பேர்கள் சிக்கி இருக்கின்றார்கள். உடனே தீயணைப்பு படையினர் தீயை அணைத்து அனைவரையும் பாதுகாப்பாக காப்பாற்றி இருக்கிறார்கள்.

Advertisement