‘இவன் அவனானு கேட்டாங்க’ – பிரபல பாடகரின் மகனாக இருந்தும் ஜாதி பிரச்சனையை சந்தித்துள்ள நடிகர் ஸ்ரீ.

0
282
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார். இவர் பிரபல இசை இயக்குனர் சங்கர் கணேஷின் மகனாவார். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை காவியாஞ்சலி என்ற தொடரின் மூலம் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர் கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், மேகலா, சிவசக்தி, உறவுகள், இதயம், கனா காணும் காலங்கள், பிள்ளைநிலா, தலையணை பூக்கள், யாரடி நீ பிள்ளைநிலா, போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் பம்பரக்கண்ணாலே, சரோஜா தேவி, ரங்கூன், ஆர்கேநகர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். மேலும், ஸ்ரீ குமார் சீரியல் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றிருக்கிறார். பின் இவர் ஜோடி நம்பர்-1, மானாட மயிலாட போன்ற பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்ற தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் ஸ்ரீகுமார் குறித்த தகவல்:

இதனிடையே இவர் 2009ம் ஆண்டு ஷமிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமிதா வேற யாரும் இல்லைங்க, ‘தோழா தோழா தோல் கொடு’ என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பாண்டவர் பூமி படத்தின் மூலம் தான் இவர் மத்தியில் பிரபலமானவர். அதற்கு பிறகு இவருக்கு சரியான சினிமா வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரையை நோக்கி பயணம் செய்தார். இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். தற்போது ஸ்ரீகுமார் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் வானத்தைப்போல என்ற சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீகுமார் பேட்டி:

இந்த சீரியல் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஸ்ரீகுமார் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், என்னுடைய அப்பா வெளிப்படையாக தான் எஸ் சி என்று கூறினார். இதனாலே பல இடங்களில் என்னுடைய ஜாதி பெயரை சொல்லி ரொம்ப தாழ்த்தி பேசினார்கள். ஒரு முறை படத்தில் நடிப்பதற்கு சென்றபோது, என்னுடைய பேச்சில் சென்னை லாங்குவேஜ் வரும். அதனால் அவர்கள் நான் பேசுவதை கேட்டு இவங்க அந்த அழுதானே என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

கஷ்டமான நிலை:

உடனே அருகில் இருந்தவர் ஆமாம், வேறு வழியில்லை அதற்காகத்தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க வைத்தேன் என்று சொன்னார். இந்த மாதிரி நான் நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். திறமைக்கு மதிப்பில்லாமல் சாதியை வைத்து மதிப்பிடுவது இன்னும் தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் எனக்கும் என்னுடைய அப்பாவிற்கும் சண்டை ஏற்பட்டு வெளியே வந்து நான் சில வருடங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன். என்னுடைய காருக்கு பெட்ரோல் கூட போட முடியவில்லை. பார்க்கிங் கட்டணம் ஐந்து ரூபாய் கட்ட முடியாத நிலையில் எல்லாம் இருந்து இருக்கிறேன்.

பட வாய்ப்பு கிடைக்காத காரணம்:

அதேபோல் பெரியண்ணா படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை விஜயகாந்த் சார் ரேபர் செய்து இருந்தார். சூர்யாவிற்கு விஜய் சார் சிபாரிசு செய்தார். அப்போது விஜய் சார் என்னை பார்த்து, விஜயகாந்த் அண்ணா உங்கள் பெயரை சொல்கிறார் என்று சொன்னார். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு சூர்யா தான் சரியான ஆள். அவர் அதற்காக ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார். நான் சரியாக பயிற்சிகள் எல்லாம் எடுத்து முயற்சி செய்திருந்தால் கண்டிப்பாக என்னுடைய டிராக் மாறி இருக்கும். அப்போது நான் கவனிக்காமல் விளையாட்டு தனமாக விட்டதால் தான் என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது. இப்போதும் நான் படங்களில் நடிக்க அலைந்து கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறினார்.

Advertisement