ரஞ்சித், வெற்றிமாறன் வளர்ச்சியால் தமிழ் சினிமா தளர்ச்சியடைந்தவிட்டது – பிரவீன் காந்தி கருத்துக்கு வெற்றிமாறன் பதிலடி

0
329
- Advertisement -

தன்னை விமர்சித்த இயக்குனர் பிரவீன் காந்திக்கு இயக்குனர் வெற்றிமாறன் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் விஷயத்தில் கொந்தளித்த நடிகர் ரஞ்சித் தற்போது குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இந்த படம் நாடகக்காதலுக்கு எதிராக இந்த படம் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் ட்ரைலரில் ப.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் வசனம், திருமாவை குறிப்பிடும் வகையில் ஓசிக தலைவர் என்ற கதாபாத்திரம், மாட்டு கறி வசனம் போன்ற பல சர்ச்சையான விஷயங்கள் இடம்பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பிரவீன் காந்தி, பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரவீன் காந்தி, பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இந்த விழாவில் பேசிய அவர் ‘சாதி படங்களை எடுக்கும் இயக்குனர்களுக்கு எதிராக நான் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பேன்.

- Advertisement -

பிரவீன் காந்தி ஆவேசம் :

ஜாதியை சொல்லவே கூடாது. ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற சில இயக்குனர்கள் வளர்ச்சி அடைந்த பின்னர் தான் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. சினிமாவில் ஜாதியை சொல்பவன் சமுதாயத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன் என்பதுதான் என்னுடைய கொள்கை. ஆனால் ரஞ்சித் சார் கோயம்புத்தூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடந்த போது தன்னுடைய தங்கை சகோதரன் அங்கே சீர் கெட்டுக் கொண்டிருக்கிறான் என்று முதல்முறையாக குரல் கொடுத்தவர் அவர் தான்.

அதன் பின்னர் தான் அது குறித்து விழிப்புணர்வு வந்தது. என்னுடைய கலாச்சாரத்தை தூக்கிப்பிடிப்பேன் என்று குரல் கொடுத்த ரஞ்சித் நிச்சயம் நல்ல படம்தான் எடுப்பார். அது ஜாதியை பின்னணியில் வைத்து எடுத்திருந்தாலும், அது நல்ல படமாக தான் இருக்கும். சமுதாயத்திற்கு கருத்து சொல்லக்கூடிய படமாக தான் இருக்கும். நல்ல படமாக தான் இருக்க வேண்டும்’ என்று ஆவேசமாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

வெற்றிமாறன் பதிலடி :

இப்படி ஒரு நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து வெற்றிமாறனிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் பழைய விஷயங்களை மக்கள் கடந்து வந்து விட்டார்கள் ஆனால் இன்னமும் மக்களை புண்படுத்துகிறாரா வெற்றிமாறன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன் இதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவில் சாதிய ரீதியான ஒடுக்குமுறை என்று இல்லை என்று சொல்கிறார்கள் அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று ஒருவர் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.

சின்னத்துரை குறித்து சொன்னது :

இதற்கு பத்திரிக்கையாளர் ஒருவர் ‘தமிழகத்தில் ஜாதிய அடக்குமுறை இன்னமும் இருக்கிறதா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன் ‘இந்தியா முழுக்க இருக்கிறது. தமிழகத்திலும் நிறைய சம்பவங்கள் இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் இன்னமும் இருந்து கொண்டு தானே இருக்கிறது என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சாதிய ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாக இருந்த மாணவன் சின்னதுரை பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு தன்னை தாக்கிய மாணவர்களுக்கு அந்த மாணவன் செய்த பதில் தாக்குதல் தான் இது’ என்று கூறியுள்ளார்.

Advertisement