எம் எல் ஏ அலுவலகமா ? வட்டிக் கடையா ? கேலிக்கு உள்ளான அலுவலக திறப்பு – வானதி ஸ்ரீனிவாசன் அளித்த விளக்கம்.

0
2371
vanathi
- Advertisement -

தன் அலுவகத்தில் ‘தன லாபம்’ என்று எழுதப்பட்டு இருந்தது குறித்து முதன் முறையாக விளக்கம் அளித்துள்ளார் கோவை தெற்கு தொகுதி MLA வானதி ஸ்ரீனிவாசன். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து கடந்த மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இதில் கமல் போட்டியிட்டதால் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-86.jpg

இந்த தொகுதியில் ஆரம்பத்தில் ஒரு சில சுற்றில் முன்னணியில் இருந்து வந்தார் கமல். இவருக்கும் வானதி சீனிவாசனுக்கு இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில் யார் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் வானதி ஸ்ரீநிவாசன்,1728 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடும் போராட்டதிற்கிடையே கமல் தோல்வியுற்றார்.

இதையும் பாருங்க : லவ் பண்ணது ஒரு பொண்ணு, கல்யாணம் பண்ணது ஒரு பொண்ணு, இப்போ வாழ போறது வேற பொண்ணு – புதிய ஐஸ்வர்யாவை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள்.

- Advertisement -

எம் எல் வாக வென்ற சில நாட்களிலேயே கோயம்பத்தூரில் அலுவலகம் திறந்து இருந்தார் வானதி ஸ்ரீனிவாசன். அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து இருந்தார். ஆனால், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் மிகவும் கேலிப் பொருளாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே அந்த அலுவலகத்தில் பூஜை நடைபெற்ற சாமி படத்தின் சுவற்றில் தன லாபம் என்று எழுதப்பட்டு இருந்தது தான்.

Image

இது சமூக வலைதளத்தில் பெரும் கேலிப் பொருள் ஆகி இருந்தது. இந்தியாவுலயே ஏன் நம்ம வேல்டுலேயே ஒரு MLA ஆபிஸ்ல “தனலாபம்”ன்னு எழுதி ஓப்பனா யாவாரத்த தொடங்கினது நம்ம வானதி அக்கா தான் !! அக்கா !! அந்த மயிலாப்பூர் ஃபேன் EMI பாக்கி ₹700 கட்டிருவீங்க இல்ல? என்று பதிவிட்டு என்றெல்லாம் கேலி செய்து இருந்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-87.jpg

இதே போல சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமா வட்டிக்கடையா? தனலாபம் என்று போட்டு குத்துவிளக்கு ஏற்ற என்று பலர் கேலி செய்து வந்தனர். என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு விழாவுக்கு நடந்த பூஜையின்போது ஐயர் அப்படி எழுதிவிட்டார்.  நான் அலுவலகம் செல்லும்போது பூஜைக்கு எல்லாம் தயாராக இருந்தது. எனக்கு ஐயர் அப்படி எழுதியது பிடிக்கவில்லை. ஆனாலும், அதை நான் அந்த நேரத்தில் அழித்தால் அபசகுனமாகத் தோன்றலாம். அதனால் அப்படியே விட்டுவிட்டேன். அந்தப் படத்தையும் நான்தான் பதிவு செய்தேன். காரணம் நான் எதையும் கணக்கு போட்டு எல்லாம் செய்வதில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement