தமிழ் சினிமாவில் நடித்து வரும் பல நடிகைகள் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும், விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டு இருக்கிறார் நம்ம வாணி போஜன். நடிகை வாணி போஜன் முதலில் மாயா என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் நுழைந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன சீரியல்களில் தெய்வமகள் சீரியலும் ஒன்று. தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும், வாணி போஜன் அவர்கள் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை.
இதனைத் தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் கலக்கி வருகிறார். இவர் முதன் முதலாக விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அஷ்வத் மாரிமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ள படம் தான் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் வாணி போஜன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேச வைத்தது. இந்நிலையில் நடிகை வாணி போஜன் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். திடீரென்று பேட்டி முடிவதற்கு முன்பே வாணிபோஜன் எழுந்து சென்று விட்டார்.
இதையும் பாருங்க : உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ள மீனா. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பேட்டியில் தொகுப்பாளர் உங்களுடைய சினிமா வாழ்க்கையில் ஏதாவது அட்ஜஸ்ட்மெண்ட் சம்மந்தமான அனுபவங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு வாணிபோஜன் அவர்கள் கூறியது, இந்த அட்ஜஸ்ட்மென்ட் தமிழ் சினிமாவில் மட்டுமில்லை இந்தியன் சினிமாவிலும் இருக்கிறது. எனக்கும் நடந்திருக்கிறது. ஆனால், நான் அதற்கான முக்கியத்துவம் கொடுத்ததில்லை. என்னிடம் நேரடியாக வந்து யாரும் அந்த மாதிரி பேசவில்லை. மேனேஜர் கிட்ட மட்டும் இந்த மாதிரி ஒரு சில பேர் கேட்டிருக்காங்க. அது அவரே பேசி முடித்துவிட்டார். என்னிடம் வந்து நேரடியாகவோ இல்லை, ஃபோன் கால் மூலமோ யாரும் அந்த மாதிரி நடந்து கொண்டதில்லை.
வீடியோவில் 11:46 நிமிடத்தில் பார்க்கவும்
அந்த மாதிரி பிரச்சனை வந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்க ஒத்துக்கொள்ள மாட்டேன். சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இந்த மாதிரி பிரச்சனை நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் இந்த மாதிரி நடக்காது என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். பின் தொகுப்பாளர் நீங்கள் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு செல்லும்போதோ, மென்மேலும் வளரும் போதோ ஒருசில விஷயத்திற்காக ஒத்துக்கொண்டு உள்ளீர்களா? என்று திருப்பி திருப்பி கேள்வி கொண்டே இருந்தார். இதனால் வாணி போஜன் அவர்கள் மிகவும் கடுப்பாகி நான் இந்த இன்டர்வியூ வை முடித்துக் கொள்கிறேன்.
நான் இதற்கு மேல் நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது என்று சொல்லி சென்று விட்டார். பின் திடீரென்று வாணிபோஜன் வந்து இது எல்லாம் சும்மா, ஒரு நாடகம் என்றும், உங்களுடைய ஆட்கள் தான் இந்த மாதிரி ஒரு பிராங்க் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்றும் சிரித்துக் கொண்டே கூறினார். ஒரு நிமிடம் பார்க்கும் அனைவருமே உண்மையாகவே பிரச்சனை என்று நம்பும் அளவிற்கு இந்த பேட்டி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.