என் மகளுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன்-சொந்த மண்ணில் கார்த்தி உருக்கம்.

0
24217
karthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற முன்னணி நடிகர் சிவகுமார். இவர் கோயம்புத்தூர் அருகில் உள்ள கலங்கல் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் சிறந்த ஓவியர், மேடைப்பேச்சாளர் என பன்முகங்கள் கொண்டவர். நடிகர் சிவகுமார் அவர்கள் சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் செட்டில் ஆகி விட்டார். இவருக்கு சூர்யா, கார்த்தி, பிருந்தா என்று மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். நடிகர் சூர்யாவும், கார்த்தியும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். நடிகர் சூர்யா அவர்கள் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். இவர் மும்பையை சேர்ந்தவரும், தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஜோதிகாவை திருமணம் செய்தார். நடிகர் கார்த்திக் தனது கொங்கு பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் திருமணம் செய்த அந்த பெண்ணின் ஊர் ஈரோடு அருகே உள்ள காளிங்கராயன் பகுதியாகும்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

இந்நிலையில் நடிகர் கார்த்திக் அவர்கள் ஈரோடு அருகே உள்ள காளிங்கராயன் கால்வாய் பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஆற்றில் விடும் விழாவிற்கு தன் குடும்பத்துடன் சென்று உள்ளார். மேலும், அந்தக் கால்வாயை மீட்டு மீண்டும் அனைவரும் உபயோகிக்கும் வகையில் இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்து கார்த்திக் பேசியது அங்கிருந்தவர்கள் எல்லாறையும் நெகிழ வைத்து உள்ளது.

அப்போது கார்த்திக் அவர்கள் கூறியது, 738 வருஷத்துக்கு முன்னாடி காளிங்கராயன் என்பவர் மக்களுக்காக இந்த கால்வாயை கட்டினார். அவருடைய பெயரை தான் இந்த கால்வாய்க்கு மக்கள் வைத்து உள்ளார்கள். தன்னுடைய சுயநலத்திற்காக தான் இவர் இந்த கால்வாயை கட்டினார் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அந்த கால்வாயிலிருந்து தண்ணீர் கூட அருந்தாமல் தன்னுடைய குடும்பத்துடன் ஊரை விட்டு சென்று விட்டார். அன்று முதல் இன்று வரை நாம் தான் இந்த நீரை அனுபவித்துக் கொண்டு வருகிறோம்.

-விளம்பரம்-

இத்தனை ஆண்டுகளாக இந்த நீர் அனைவருக்கும் பயன்படும் விதமாக இருந்தது. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதற்கு காரணம் இந்த பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் தான். நவீன காலம் உருவாக உருவாக கிராமங்களை சுற்றியும், நீர்நிலைகளை சுற்றியும் தொழிற்சாலைகளை உருவாக்கி வருகிறார்கள் கார்ப்பரேட் கம்பெனிகள். இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் எல்லாம் குடிநீரில் கலக்கிறது. இந்த கழிவுகள் தண்ணீரில் கலப்பதை தடுக்க இளைஞர்கள் தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கும் சென்று அவர்களுடைய பொருட்செலவிலேயே கழுவி நீரை சுத்தப்படுத்தி பின்பு கால்வாயில் கழிவுகளை விட செய்யுமாறு வலியுறுத்தி கடிதம் கொடுக்க வேண்டும். தனிமனிதனாக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக காளிங்கராயன் செய்த செயல் இன்று அழிந்து கொண்டு வருகிறது. இது அழியாமல் தடுக்க நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

Related image

நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமான உலகம் உருவாக்கவும், ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கும் நாம் வழிவகை செய்ய வேண்டும். நோய் இல்லாமல் இருப்பதும், நோய் இல்லாமல் வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை. அதை உணர்த்தவும் மற்றவர்களுக்கு புரிய வைக்கவும் இளைஞர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஆக வேண்டும். மேலும், நான் சிறு வயதில் இருக்கும் போது ஊருக்கு செல்லும்போதெல்லாம் எங்கள் ஊரில் இதுபோன்ற நீரை நான் கண்டதில்லை. திருமணம் முடிந்த பிறகு முதல் முறையாக இந்த ஊருக்கு வந்தபோது தான் இந்த தண்ணீரை பார்த்து நான் பெருமிதமும், பொறாமையும் அடைந்தேன். என் வாழ்நாளில் இன்று தான் முதன் முதலாக முளைப்பாரியை ஆற்றில் விட்டு இருக்கிறேன். என் மகளும் ஆற்றில் விட்டது அவருடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். மக்களுக்காகவும் சமுதாயத்திற்காகவும் இந்த கால்வாயை நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்று உணர்ச்சி பூர்வமான விஷயங்களை கூறியிருந்தார் நடிகர் கார்த்திக்.

Advertisement