கதாநாயகியானார் தெய்வ மகள் புகழ் வாணி போஜன்.! அதுவும் இந்த பிரபல நடிகரின் படத்தில்.!

0
1600
Vani-Bhojan
- Advertisement -

சீரியலில் நடித்து வரும் பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்த வண்ணம் இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த பிரியா பவனி ஷங்கர் தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார்.

-விளம்பரம்-

இந்நிலையில் தொலைக்காட்சி சீரியலில் இருந்து அடுத்த வகையாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடரில் ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை வாணி போஜன், தற்போது சினிமாவில் கால் பதிக்கவுள்ளார்.

இதையும் படியுங்க : நடிக்க வருவதற்கு முன் இப்படிப்பட்ட வேலை செய்தாரா வாணி போஜன் ! புகைப்படம் உள்ளே 

- Advertisement -

தமிழில் சரோஜா, கப்பல், மேயாத மான் போன்ற படங்களில் நடித்த வைபவ் , நடிகர் நிதின் சத்யா தயாரிக்கவு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் நடிகர் வைபவ் ஜோடியாக நடிக்க இருக்கிறார் வாணி போஜன். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

-விளம்பரம்-

ஏற்கனவே, நடிகை வாணி போஜன் லோகேஷ் குமார் என்பவறின் இயக்கத்தில் “N4” என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. இயக்குனர் லோகேஷ் குமார் தமிழில் ஏற்கனவே “My son is a gay” என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இயக்கவிருக்கும் இவரது இரண்டாவது படமான “N4” ஒரு கமர்ஷியல் த்ரில்லர் படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

Advertisement