சிக்னல்ல கூட அப்படி பன்றானுங்க, சத்தியமா அவனுங்கெல்லாம் திருந்தவே மாட்டானுங்க – வாணி போஜன் ஆவேசம்.

0
1501
- Advertisement -

சிக்கனலில் கூட பெண்களை விட்டு வைக்க மாட்டார்கள் என்று நடிகை வாணி போஜன் ஆவேசமாக அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் வாணி போஜன். இவர் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து இவர் வடிவமைப்பு விளம்பர வேலையை செய்து இருந்தார். அதன் மூலமாகத்தான் சின்னத்திரையில் உள்ள தொடர்களில் நடிக்க தொடங்கினார் வாணி.

-விளம்பரம்-

இவர் தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், தெய்வமகள் சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் வாணி. மேலும், வாணி போஜன் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனைத்தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் கலக்கி வருகிறார்.

- Advertisement -

வாணிபோஜன் குறித்த தகவல்:

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த செங்களம் என்ற வெப் சீரிஸில் வாணி நடித்து இருந்தார். இந்த தொடரில் கலையரசன், ஷாலி நிவேகாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அபி அண்ட் அபி என்டர்டெயின்மென்ட் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு தருண் குமார் இசையமைத்திருக்கிறார். பொலிட்டிக்கல் திரில்லர் பாணியில் இந்த வெப் சீரிஸை உருவாக்கியிருக்கிறார்கள்.

வாணி போஜன் நடிக்கும் படங்கள்:

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை அடுத்து வாணி அவர்கள் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, லவ், ரேக்ளா, ஆர்யன் போன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வரிசையாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதை அடுத்து விதார்த்துடன் ஒரு படம் வாணி போஜன் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ்க்கு காத்துக் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

பாயும் ஒளி நீ எனக்கு படம்:

பின் இவர் ஒரு புதிய வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். தற்போது வாணி போஜன் அவர்கள் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார். இந்த படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் விளம்பர பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வாணி போஜன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் பெண்களைக் குறித்து பேசி இருந்தது, பெண்களை தவறாக பார்க்கும் நபர்கள் சத்தியமாகவே திருந்த மாட்டார்கள்.

வாணி போஜன் அளித்த பேட்டி:

வயதான பெண்கள் பைக்கில் சேலை கட்டி செல்வார்கள். நான் பல சிக்கனல்களில் பார்த்திருக்கிறேன். அவர்கள் மேல் தான் அனைவரின் கண்ணும் இருக்கும். அது ஏன் என்று தான் எனக்கு தெரியவில்லை. சேலை கட்டினாலே அவர்களை இப்படி பார்க்கணுமா? அது நல்லதா? இல்லை கெட்டதா? என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. வயதான பெண்களை கூட அவர்கள் விட மாட்டார்கள். வேறொரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். எனக்கு அது சுத்தமாகவே பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement