இசைப்புயலின் தந்தை தான் இந்தப் படங்களுக்கு இசையமைப்பாளரா? – இசையமைத்த படம் வெளியாகும் முன்பே மரணித்த துயரம்

0
2274
ARRahman
- Advertisement -

ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமானின் தந்தை இசையமைத்த படங்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் . இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். மேலும், இவர் மேற்கத்திய இசையை மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இல்லாமல் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ரகுமான்.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் ரகுமான். சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்திற்கு ரகுமான் தான் இசை அமைத்து இருந்தார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இதை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் தந்தை இசையமைத்திருக்கும் படங்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வாயிலாகி வருகிறது. அதாவது, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் தந்தை ஆர்கே சேகரும் ஒரு இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. ராஜகோபால குலசேகரன் பெயரின் சுருக்கம் தான் ஆர் கே சேகர். இவர் திருவள்ளூரில் பிறந்தார். ஆரம்பத்தில் இவர் மேடை நாடகங்களில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அதன் பிறகு தான் மலையாள சினிமாவில் நுழைந்தார். முதலில் இவர் பலருக்கும் உதவியாளராக இருந்து அதற்குப்பின் 1964ல் வெளிவந்த பழசி ராஜா என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. அதன்பின் இவர் ஒரு சில படங்களுக்கு இசையமைத்து இருந்தார். பின் ஏழு வருடங்கள் கழித்து தான் இவர் மீண்டும் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார். முதலில் சில படங்கள் நன்றாக அமைந்தது. பின் இவர் இசையமைத்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தது.

ஆர்கே சேகர் இசையமைத்த படங்கள் :

இதனால் இவர் எம்பி ஸ்ரீனிவாசன், தக்ஷிணாமூர்த்தி போன்ற பல இசையமைப்பாளரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் எம்.கே. அர்ஜுனன். இவர் ஆர்கே சேகரின் நெருங்கிய நண்பர். அவருடைய முதல் படம் தொடங்கி கடைசி படம் வரையும் இவர்தான் பணிபுரிந்து இருந்தார். இவரை அடுத்து இன்னொரு இசையமைப்பாளர் தேவராஜன் மாஸ்டர். இவர் மலையாளத்தில் உருவாக்கிய பல பாடல்களுக்கு ஆர்கே சேகர் இசையமைத்திருக்கிறார்.

40 வயதில் மரணம் :

மேலும், தேவராஜன் மாஸ்டர் உடன் இணைந்து ஆர்கே சேகர் இசை அமைத்த பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. பின் இவர் 1976 ஆம் ஆண்டு தன்னுடைய 40 வயதில் ஆர்கே சேகர் இறந்துவிட்டார். இவருடைய இறப்பு இசை உலகில் பேரிழப்பாக இருந்தது. அவர் மறைவுக்கு முன் சோட்டானிக்கரை அம்மா என்ற படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். இந்த பட வேலைகள் முடியும் முன்பே அவர் இறந்து விட்டார். இருந்தாலும் அவருடைய பாடல் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.

Advertisement