சினிமா துறைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகை நடிகர்களுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் அவர்களுக்கு இல்லத்தரிசி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளனர் என்றே கூறலாம்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தெய்வமகள் தொடரில் நாயகியாக சத்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் வாணி போஜன். தற்போது நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார்.
வீட்டு இல்லத்தரசிகளிடையே பெரும் ரசிகர்கள் கொண்டுள்ள இவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளதாக கூறி உள்ளார். மேலும்,தற்போது நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் வாணி போஜன்.
வாணி போஜனின் அம்சமே அவரது குடும்பபாங்கான தோற்றம் தான். ஆனால், சமீபத்தில் மாடர்ன் உடைகளில் வாணி போஜன் நடத்திய போட்டோ ஷூட் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதோ அதில் சில புகைப்படங்கள். வாணி போஜன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.