என்ன கிரிமினல் மாதிரி நடத்துனதும் அழுதுட்டேன் – கொரோனவால் பாதிக்கப்பட்ட நடிகை நவ்யா.

0
1619
navya

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது வாணி ராணி சீரியல் புகழ் நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நவ்யா சுவாமி.சமீபத்தில் இவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தார்.

இதையும் பாருங்க : சத்யா பட கமல் கெட்டப்பில் புகைப்படம் எடுத்தது எதற்காக? விஜய்சேதுபதி விளக்கம்.

- Advertisement -

இதுகுறித்து இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை கூட வெளியிட்டிருந்தார்.ஆரம்பத்தில் நான் கொரோனா என்று தெரிந்த பிறகு அழுதேன், ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை என்பதை பின்னர் உணர்ந்தேன். எனக்கு எந்த அறிகுறிகளும் சுவாச பிரச்சினைகள் போன்ற பெரிய விளைவுகளும் இல்லை, ஆனால் மக்கள் என்னை நடத்திய விதத்தையும், என்னை எதோ தீவிரவாதி போல பார்த்ததை நினைத்து அழுதேன்.

“நான் எல்லோரிடமும் பீதி அடைய வேண்டாம் என்று கூறுவேன். வைரஸ் காய்ச்சலை விட உண்மையில் அது தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இன்று எனது நான்காவது நாள், நான் ஏற்கனவே நன்றாகவும் இருக்கிறேன். COVID 19 க்கு சோதனை செய்வதில் தவறில்லை, வெட்கப்பட ஒன்றுமில்லை. நான் இப்போது தலப்பாக்கட்டி பிரியாணி மற்றும் சென்னை பீச் எல்லாத்தையும் மிஸ் செய்கிறேன்.

-விளம்பரம்-

Advertisement