வாணி ராணி சீரியல் நடிகர் மனைவி விவாகரத்து செய்ததற்கு இந்த சன் டிவி Vj தான் காரணமா ? என்ன நடந்தது ?

0
1530
vignesh
- Advertisement -

பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை திகழ்கிறது. சின்னத்திரையில் சீரியல்கள் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி பார்க்கும் ஒன்றாக சின்னத்திரை திகழ்கிறது. மேலும், வெள்ளித்திரைக்கு சென்று படங்களைப் பார்ப்பதை விட சின்னத்திரை பக்கம் செல்பவர்கள் தான் அதிகம் உள்ளார்கள். இதனால் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

அந்த வகையில் சின்னத்திரை சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்பவர் நடிகை ஹரிப்பிரியா. சொல்லப்போனால் இவரை இசை என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பிரியமானவள் தொடரின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர். இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் நடித்தார். பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிரியமானவள் என்ற தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் ஹரிப்ரியா நடித்திருந்தார்.

- Advertisement -

ஹரிப்ரியா நடிக்கும் சீரியல்கள்:

இந்த சீரியலின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் என்று சொல்லலாம். பின் இவர் சிறிய இடைவெளி எடுத்து கொண்டார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் என்ற தொடரிலும் ஹரிப்ரியா நடித்து வருகிறார். இதனிடையே நடிகை ஹரிப்ரியா அவர்கள் 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஹரிப்ரியா குடும்பம் பற்றிய தகவல்:

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த வீடியோ, புகைப்படம் என அனைத்துமே சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். இப்படி சந்தோஷமாக இருந்த இவர்கள் திடீரென்று விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியாக இருந்தது. மேலும், இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஹரிப்ரியா -விக்கி விவாகரத்துக்கு காரணம்:

இந்நிலையில் ஹரிப்ரியா -விக்கி விவாகரத்துக்கு காரணம் பிரபல தொகுப்பாளர் அசார் தான் என்று கூறப்படுகிறது. ஏன்னா , அசாருக்கும், ஹரிப்ரியாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தினால் தான் விவாகரத்து ஏற்பட்டதாக பல கிசுகிசுக்கள் வந்தன. ஆனால், இந்த தகவலை ஹரிப்பிரியா மறுத்து இருந்தார். இந்நிலையில் இது குறித்து ஹரிப்ரியா இன்ஸ்டாவில் கூறி இருப்பது, எங்களுக்கு எந்த ஜாதி மதம் எதிர்ப்பு என எதுவும் இல்லை. ஒரு பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஒரு ஆண் இருப்பான். அவர் என் காதலனோ, கணவனோ கிடையாது. பின் எப்படி அவர் என்னுடைய ஆத்மார்த்தமான நபராக இருக்க முடியும்.

சர்சைக்கு முற்றுப்புள்ளி வாய்த்த ஹரிப்ரியா:

அதே போல் அந்த மனிதர் என்னுடைய பாய்பிரெண்ட் கிடையாது. காதல் கிடையாது, என் வாழ்க்கை துணையும் இல்லை .மகிழ்ச்சியாக பேசுவதே என்னுடைய பிறப்புரிமை. தவறு என்னுடையது இல்லை. பார்ப்பவர்களிடம் தான் உள்ளது. இதை நல்ல மனதோடு பார்த்தால் தவறாக தெரியாது என்று பரவிவந்த வதந்திகளுக்கு ஹரிப்ரியா முற்றுப்புள்ளி வைத்து இருந்தார். இப்படி ஹரிப்ரியா பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதன் மூலமாவது ஹரிப்ரியா விவாகரத்து பற்றிய சர்ச்சை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்கள் இருவருக்கும் முழுமையாக விவாகரத்து கிடைக்க வில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement