‘நான் உன்னை ஒரு நாள் மீண்டும் சந்திக்கிறேன்’-மஞ்சுளா பிறந்தநாளில் வனிதாவின் உருக்கமான பதிவு

0
2031
- Advertisement -

மறைந்த நடிகை மஞ்சுளாவின் பிறந்த நாள் அன்று நடிகை வனிதா பதிவிட்டு இருக்கும் போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார்.

-விளம்பரம்-

திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

வனிதா நடிக்கும் படங்கள்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கிறார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் வனிதா பிசியாக நடித்து வருகிறார்.

வனிதாவின் யூடியூப் சேனல் :

மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது குறித்து இணையத்தில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

-விளம்பரம்-

வனிதா போஸ்ட்:

இந்த நிலையில் தன்னுடைய தாய் மஞ்சுளாவின் பிறந்தநாளில் வனிதா அவர்கள் உருக்கமான பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா. 10 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும்
உன்னை பற்றிய நினைப்பை என்னால் நிறுத்த முடியவில்லை. நீ எனக்கு கற்றுக் கொடுத்த அனைத்தையும் உன்னை போலவே செய்து கொண்டிருக்கிறேன்.

மஞ்சுளாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து:

உன்னை போல் தான் நானும் இருக்கிறேன். என்னுடைய ஸ்கிரீன் சேவர், வால்பேப்பர், என்னுடைய வீடு,
என்னை சுற்றிலும் நீங்கள் இருக்கிறீர்கள். நான் உன்னை ஒரு நாள் மீண்டும் சந்திக்கிறேன். அதுவரைக்கும் என்னுடைய அன்பு! என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதாவிற்கு ஆறுதல் கூறி மஞ்சுளாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement