இவர் தான் தமிழகத்தின் ஷாருக்கான்- வனிதா சொன்ன அந்த நடிகர். யார் தெரியுமா?

0
870
Vanitha
- Advertisement -

இவர் தான் தமிழ் திரை உலகின் சாருக்கான் என்று வனிதா விஜயகுமார் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் வசந்த் பாலன். இவர் இவர் இயக்கத்தில் வெளிவந்த வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து தற்போது இவர் அநீதி என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கைதி, மாஸ்டர் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த அர்ஜுன் தாஸ் தற்போது கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக சர்பாட்டா பரம்பரை நாயகி தூசுரா விஜயன் நடித்திருக்கிறார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆக இரு மொழிகளிலும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

- Advertisement -

அநீதி படம்:

மேலும், இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சில தினங்களுக்கு முன்புதான் சென்னையில் நடைபெற்றது. இதில் அநீதி படக்குழு உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருந்தது, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் தான் நான் மீண்டும் தமிழ் சினிமா உலகில் நுழைந்திருக்கிறேன்.

விழாவில் வனிதா சொன்னது:

இது ரொம்ப அருமையான திரைப்படம். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை எனக்கு வசந்த் பாலன் அளித்திருக்கிறார். அவருக்கு மிக்க ரொம்ப நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குனர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார். ஆனால், அதில் அவருக்கு துளி கூட கர்வம் இல்லை. அவ்வளவு எளிமையாக இவர் அனைவரிடமும் பழகுகிறார். அர்ஜுன் தாசை தமிழ் திரை உலகின் சாருக்கான் என்று கூறலாம். இதை நான் மிகைப்படுத்துவதற்காக சொல்லவில்லை.

-விளம்பரம்-

படக்குழு குறித்து சொன்னது:

அநீதி படம் திரைக்கு வரும் போது நீங்கள் அதை உணர்வீர்கள். தூஷரா விஜயனும் மிக திறமையான நடிகை. இந்த படத்தில் பணியாற்றியுள்ள அனைவரும் சிறப்பான தங்களுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். அநீதி திரைப்படம் பெரிய வெற்றியை பெரும் என்று கூறியிருக்கிறார். சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான தமிழ் விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா.

வனிதா திரைப்பயணம்:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் வனிதா பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement