நீ சூப்பர் ஸ்டாரா வருவேன்னு விஜய் கிட்ட சொன்னேன், இப்போ பிரசாந்த் கிட்ட சொல்றேன் – வனிதா பேச்சு

0
513
- Advertisement -

அந்தகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வனிதா விஜயகுமார் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டு இருந்தவர் பிரசாந்த். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். ஒரு காலத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றியை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதோடு இவர் 90 காலகட்டத்தில் விஜய், அஜித்தை விட ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட மவுஸ் கொண்டு இருந்தவர். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் ‘வின்னர்’ தான். அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்தது. பின் இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியது. இதனால் பிரசாந்த் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போனார். இடையில் அப்பப்போ துணை கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து இருந்தார். பின் இவர் ‘சாகசம்’ படம் மூலம் மீண்டும் சினிமா உலகில் ரீ எண்ட்ரி கொடுத்து இருந்தார். ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

- Advertisement -

அந்தகன் படம்:

தற்போது இவர் ‘அந்தகன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி, கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், மனோபாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஹிந்தியில் ஆயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் முதல் பாடலை விஜய் தான் வெளியிட்டு இருந்தார். இந்த பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி பாடியிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் வனிதா விஜயகுமார், படத்தில் அனைவருமே சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஒரு நாள் என்னுடைய மொபைல் போன் தொலைந்து விட்டது. என்ன செய்வது, யாருடைய காண்டாக்ட் நம்பர் இல்லைன்னு அந்த டென்ஷனில் நான் இருந்தேன்.

-விளம்பரம்-

இசை வெளியீட்டு விழாவில் பிரபுதேவா:

அப்போது தியாகராஜன் சார் எனக்கு போன் பண்ணி எங்க இருக்க என்று கேட்டார். நான், சார் போன் தொலைஞ்ச டென்ஷனில் இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன் என்று சொன்னேன். உடனே அவர், எந்த இடம் மட்டும் சொல்லுங்க என்று சொல்லி எனக்கு ஒரு புது போன் வாங்கித் தந்தார். இது பணத்திற்காக சொல்லும் விஷயம் இல்லை அன்பிற்காக சொன்னது. அதே போல் இந்த படம் கண்டிப்பாக பிரசாந்துக்கு ஒரு கம்பேக்காக இருக்கும். பிரபுதேவாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மீது இருந்த கிரஷால் தான் நான் சினிமாவிலேயே நடிக்க ஆரம்பித்தேன்.

பிரசாந்த் குறித்து சொன்னது:

அப்போது எதிர்பாராத விதமாக விஜயுடன் ‘சந்திரலேகா’ படத்தில் நடித்தேன். ஒரு நாள் விஜயுடன் பேசி இருக்கும்போது, பிரபுதேவா அப்போது பெரிய பிரபலமான நடிகராக இருந்தார். உடனே விஜய், அவர் இருக்கும் இடமே வேறு என்று சொன்னார். உடனே நான், நீ ஒரு கட்டத்தில் பெரிய சூப்பர் ஸ்டாராக வருவாய் என்று சொன்னேன். இப்போது விஜய் என்னவாக இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். அதேபோல் இப்போது பிரபுதேவா, பிரசாந்த் உங்களுக்கு என்னவாக இருக்கிறார் என்று எல்லோருக்குமே தெரியும். தற்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். கண்டிப்பாக அடுத்த சூப்பர் ஸ்டாராக பிரசாந்த் வருவார். இதை நான் ஸ்டேட்மெண்ட்காக சொல்லவில்லை. உண்மையாக மனதார சொல்கிறேன் என்று பேசியிருக்கிறார்.

Advertisement