வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டரின் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருப்பவர் தான் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். திருமணத்துக்குப் பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
முதலில், ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர். அதன் பிறகு, ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. வனிதா விஜயகுமாருக்கும் ராஜன் என்பவருக்கும் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு நடன இயக்குனர் ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.
வனிதா குறித்து:
அது மட்டும் இல்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் டைட்டிலை அவர் வெல்லா விட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு பட வாய்ப்புகள் வனிதாவிற்கு குவிந்து வருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக வனிதா கூறுகிறார்.
வனிதா நடிக்கும் படங்கள் :
பிக் பாஸுக்கு சென்று வந்த பிறகு வனிதா வசந்த பாலனின் ‘அநீதி’ படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதை எடுத்து, பிரசாந்த் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்த ‘அந்தகன்’ திரைப்படத்தில் முக்கியமான ரோலை வனிதா விஜயகுமார் நடித்தார் . மேலும், அவரது நடிப்பில் சில படங்கள் வெளியாக இருக்கின்றது. இதற்கிடையே வனிதாவின் மூத்த மகள் ஜோவிகாவும் திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்து வருகிறார்.
வைரல் புடைப்படம்:
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைராலாகியிருக்கிறது. அதாவது கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி அமர்ந்திருக்கிறார் வனிதா விஜயகுமார். அதில் ‘Save The Date October 5 ‘என்று குறிப்பிட்டு இருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்களோ, அக்டோபர் ஐந்தாம் தேதி என்னவாக இருக்கும். ஒருவேளை இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது என்று அறிவிப்பார்களா இல்லை அன்றைய தினமே திருமணம் செய்யப் போறாங்களா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
திருமணமா இல்ல ப்ரோமோஷனா :
அதேசமயம் ராபர்டும் வனிதாவும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். அந்தப் படத்தில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் பணியாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தப் படம் பற்றிய அப்டேட் ஏதாவது அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியாகலாம். அதற்கான அறிவிப்பை தான் இப்படி கொடுத்திருக்கிறார்கள் என்று இன்னொரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள். என்ன நடக்கவிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.