என் மகனுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் – செய்தியாளர்கள் சந்திப்பில் எமோஷனலாக பேசிய வனிதா விஜயகுமார்

0
399
- Advertisement -

தனது மகன் ஸ்ரீஹரி குறித்து நடிகை வனிதா விஜயகுமார், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார்.

-விளம்பரம்-

தற்போது வனிதா மகன் விஜய் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்குகிறார். இப்படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் மகள் ஹேசல் சைனி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சிங்கத்தை மயமாக வைத்து எடுக்கும் இப்படத்திற்கு Mambo என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விழா சென்னையில் நடைபெற்றது.

- Advertisement -

ஸ்ரீஹரி குறித்து வனிதா பதிவு:

இதை அறிந்த வனிதா விஜயகுமார் மிகவும் எமோஷனலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகப்போகிற எனது மகன் விஜய் ஸ்ரீ ஹரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குருவாக ஸ்ரீஹரிக்கு வழி நடத்துகிற ரஜினி அங்கிளுக்கும் எனது நன்றி. எனது குழந்தை ஹீரோவாக போகிறான். எனக்கு கொடுக்கிற அன்பையும் ஆதரவையும் என்னுடைய மகளுக்கும் கொடுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். பின் அந்தகன் பட ப்ரோமோஷனிலும் இதை குறித்து எமோஷனலாக பேசியிருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் வனிதா:

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், என்னுடைய நிலைமை மிக மோசமாக இருக்கிறது. உண்மைய சொல்லணும்னா கடவுள் என்னை நிறைய ஆசிர்வாதம் பண்ணியிருக்காரு. ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு குறை இருக்கும். யாருடைய வாழ்க்கையும் சுமுகமாக இருக்காது. ஆனா இந்த நிலையில், உங்க பையன் ஹீரோவாக நடிக்கிறான் அதே சமயத்துல நீங்களும் ஹீரோயினா படத்துல நடிச்சிட்டு இருக்கீங்க என்று நிறைய பேர் எனக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஸ்ரீஹரி குறித்து வனிதா :

எனக்கு 18 வயதிலே ஸ்ரீஹரி பிறந்து விட்டான். அதுக்காக நான் எப்பவும் வருத்தப்பட்டது கிடையாது. அந்தக் குழந்தை அப்போ பொறந்ததால் தான் இப்போ ஹீரோவா வந்து நிற்கிறான். என் மகள் ஜோவிகாவை நிறைய நிகழ்ச்சிகள் மூலம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் என் மகன் ஸ்ரீஹரியை அப்படி நீங்க எங்கேயும் பார்த்திருக்க முடியாது. அப்படிப்பட்டவன் இப்போது ஹீரோவாக நடிக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கு. இதை நான் சொல்லணும்னு அவசியம் கிடையாது. ஒரு தாயாக என்னுடைய பாசம் என்றுமே இருக்கும். அதே மாதிரி இந்த படத்தில் நடிப்பதற்காக சிங்கத்தோடு பயிற்சி எடுத்திருக்கிறான். அது ரொம்ப ஆபத்தானது.

காலம் பதில் சொல்லும் :

தாய்லாந்துல இருக்கிற வனப்பகுதிகளிலிருந்து சிங்கத்தை தேர்ந்தெடுத்து இருக்காங்க. அப்போ நானும் கரெக்டாக ஒரு படம் ப்ரொடக்ஷன் பண்றதுக்காக தாய்லாந்தில்​ இருந்தேன். நானும் என் பையனும் ஒரே பூமியில் எங்கள் பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம். அதுவும் தாய்லாந்தில் நடந்ததனால், அம்மாவின் பாசம் மற்றும் ஆசிர்வாதம் அவனுக்கு எப்போதும் இருக்கும். ஸ்ரீ ஹரி ரொம்ப டேலண்டான குழந்தை. அவன் கண்ணை பார்க்கும் போது என் கண்ணை பார்க்கிற மாதிரி இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. கடைசியில் உங்கள் பையனிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் பேசுவீங்களா என்ற கேள்விக்கு, எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் என்று எமோஷனலாக பேசி உள்ளார் வனிதா விஜயகுமார்.

Advertisement