வனிதா இந்த வாரம் எலிமினேஷன் இல்லை.! ஆட்டத்தை ஆரம்பித்த பிக் பாஸ்.!

0
4216
Vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று அறிவிக்கபட்டது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் வனிதா தான் வெளியேற்றபட வேண்டும் என்று பெரும்பாலா ரசிகர்கள் விரும்பினாலும். அவர் இத வாரம் கண்டிப்பாக பிக் பாஸ்சால் காப்பாற்றுபட்டுவிடுவார் என்பது தான் உண்மை.

-விளம்பரம்-
Vanitha

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாத்திமா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிலைக்க வேண்டும் என்றால் ஒன்று அரைகுறையான ஆடை அணிய வேண்டும் இல்லை என்றால் சர்ச்சையை கிளப்பும் போட்டியாளராக இருக்க வேண்டும். அது இரண்டையும் என்னால் பண்ண இயலாது என்று குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அவங்க வெளிய போனதும் ஓட்டிங்லாம் பொய்னு தோணுச்சு.! சீசன் 2 போட்டியாளர் பகீர் பேட்டி.! 

இதன் மூலம் வனிதா வெளியேறினால் பிக் பாஸ் வீட்டில் பாதி பிரச்னையும் ஓய்ந்து விடும், இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியமும் குறைந்து விடும் என்பதால் வனிதா இந்த வாரம் கண்டிப்பாக வெளியேற மாட்டார் என்பதே ஆணித்தனமான உண்மை.

-விளம்பரம்-
Image result for bigg boss mohan vaidya

வனிதாவை காப்பாற்ற வேண்டும் என்பதர்க்காகவே ரசிகர்களை குழப்ப வேண்டும் என்பதற்காக மதுமிதா, மீரா ஆகியோரை எலிமினேஷன் லிஸ்டில் சேர்த்துள்ளார் பிக் பாஸ். எனவே, ரசிகர்களுக்கு யாருக்கு வாக்களிக்க போக வேண்டும் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த வாரம் முதல் டாஸ்க்கே வனிதாவிற்கு தான் அளிக்க பட்டுள்ளது. அதில் அவருக்கு அளிக்கப்பட்ட இரண்டு டாஸ்கிலும் அவர் வெற்றி பெற்றுள்ளாராம்.இதன் மூலம் அவருக்கு எதாவது சூப்பர் பவரும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதே போல வைத்தவிற்கு பதிலாக இந்த வாரம் மோகன் வைத்யா தான் வெளியேற்ற படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மோகன் வைத்யா தான் எந்த கன்டென்ட்டையும் கொடுக்காமல் இருக்கிறார். பாத்திமா பேட்டியில் குறிப்பிட்டது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டன்ட் கொடுப்பவர்களால் மட்டுமே நிலைக்க முடியும் என்பது எழுதபடாத விதி என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

Advertisement