நீங்கள் யார் என்று எனக்கு தெரியும்.! யாரை சொல்கிறார் நடிகை வரலக்ஷ்மி.!

0
946
- Advertisement -

நடிகர் சரத்குமாரன் மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார்,நடிகர் விஷாலை காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கபட்டது. இருவரும் இணைந்து அடிக்கடி சண்டக்கோழி இரண்டு படத்தில் இணைவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றி வருவதாகவும் கூறப்பட்டது.

-விளம்பரம்-
Vishal

ஆனால், இருவரும் தங்களது காதல் குறித்து எதுவும் வெளியில் சொலாத போதும் இருவரும் காதலித்து வருவதாக பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே வந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக பேச்சுகளும் தீயாக பரவி வந்தது.

- Advertisement -

ஆனால், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவிற்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக நடிகர் விஷாலின் தந்தை அறிவித்திருந்தார். இதனிடையே நடிகை வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடக்கப்போவதாக சில செய்திகள் வெளியானது.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் “எப்போதும் போல வருடத்தின் இறுதியில் வேலையில்லாத சிலர் எனக்கு மீண்டும் திருமணம் என்ற வதந்தியை பரப்பி வருகிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் சினிமாவில் தான் கவனம் செலுத்தப் போகிறன். அன்பான தோல்வியாளர்களே மீண்டும் முயற்சி செய்யுங்கள். ‘நீங்கள் யார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement