விஜய்க்காக வெள்ளைக்காரனை அடிக்கச்சென்ற வரலக்ஷ்மி..! சர்கார் இசை வெளியிட்டு விழாவில் வரலக்ஷ்மி சொன்ன சம்பவம்

0
215
sarkar

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஜய், ராதாரவி, கீர்த்தி சுரேஷ்,வரலக்ஷ்மி சரத் குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் பங்குபெற்றுள்ளனர்.

sarkar

இசை வெளியிட்டு விழாவை போல அல்லாமல் விஜய்க்கு நடத்தபட்டு வரும் பாராட்டு விழா போலவே இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ராதாரவி நடிகர் விஜய் கண்டிப்பாக சமுதாயத்திற்கு தேவை என்று கூறியிருந்தார்.

மேலும், இந்த விழாவில் பேசிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், இந்த படத்தின் மூலம் நான் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. நீங்கள் மட்டுமல்ல நானும் தளபதியுடைய ஒரு மிகப்பெரிய ரசிகை. நாங்கள் லாஸ் வெகாஸில் படப்பிடிப்பில் இருந்த போது வெள்ளைக்காரன் ஒருவன் விஜய்யை கிண்டல் செய்துவிட்டார்.

Sarkar

எனக்கு மிகவும் கோபம் வந்து நான் அவனை அடிக்க சென்றுவிட்டேன் என்று வரலக்ஷ்மி கூறியதும் மேடையில் தொகுப்பாளராக இருந்த நடிகர் பிரசன்னா, இப்போது வெள்ளைக்காரனுக்கு கூட விஜய் பற்றி தெரிந்திருக்கும் என்று கூற அரங்கமே அதிர்ந்தது.