கொரோனாவால் பாதிக்கப்பட்ட வரலக்ஷ்மி எப்படி இருக்கார் பாருங்க – ஆனா, அப்பவும் அடங்களயே.

0
248
- Advertisement -

வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டை போல தமிழ் சினிமா உலகிலும் காலம் காலமாக தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : குடுத்த வாக்கை நிறைவேற்றிய லோகேஷ், மன்சூர் அலிகானுக்கு இப்படி ஒரு வாய்ப்பா – யார் படத்துலன்னு நீங்களே பாருங்க

இரவின் நிழல்.:

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் இரவின் நிழல். பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். அகிரா புரோடக்சன் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

வரலட்சுமி நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பாராட்டை பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரலட்சுமி பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்:

இதனை மீறுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சமீபத்தில் தான் டிஸ்சார்ஜ் ஆகி இருந்தார். இந்த நிலையில் நடிகை வரலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், எல்லோருக்கும் குட் மார்னிங். எனக்கு இன்று நல்ல குட்மார்னிங்காக அமையவில்லை.

வரலக்ஷ்மி பதிவிட்ட வீடியோ:

எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் உட்பட அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டேன். ஆனாலும், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். கொரோனா நம்மை விட்டு இன்னும் விலகவில்லை. ஒட்டு மொத்த பட குழுவினரையும் மாஸ்க் அணிய வலியுறுத்துங்கள். ஏனென்றால், நடிகர்கள் மாஸ்க் அணிய முடியாது. எல்லோரும் மாஸ்க் அணியுங்கள் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள், சீக்கிரமாகவே குணம் அடைந்து திரும்பவேண்டும் வரு என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

Advertisement