வாழ்க்கைய குறை சொல்வதை ஒரு செகன்ட் நிறுத்திட்டு, இந்த குழந்தைங்கள நினைச்சு பாருங்களேன் – தன் பிறந்தநாளில் வரலக்ஷ்மி பதிவிட்ட நெகிழ்ச்சியான வீடியோ.

0
359
Varalalshmi
- Advertisement -

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் சேர்ந்து நடிகை வரலட்சுமி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதிலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் இரவின் நிழல். பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் எதிர்பார்புகளுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

வரலக்ஷ்மி திரைப்பயணம்:

இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் காட்டேரி. ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் யசோதா. இந்த படத்தில் வில்லியாக வரலட்சுமி மிரட்டி இருந்தார். இந்த படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

வரலக்ஷ்மி நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து வரலட்சுமி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கொன்றால் பாவம். இந்த படம் வருகிற மார்ச் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் வரலட்சுமி பிஸியாக இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் தமிழில் பாம்பன், பிறந்தால் பராசக்தி, தெலுங்கில் சபரி மற்றும் அனுமான், மலையாளத்தில் கலர்ஸ் என்ற படத்திலும், கன்னடத்தில் லகாம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

வரலக்ஷ்மி பிறந்தநாள்:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை வரலட்சுமி தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இந்த பிறந்த நாளுக்காக அவருடைய தாயார் சாயா தேவி கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு வரலக்ஷ்மி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி அவர்களால் முடிந்த உதவிகளையும் செய்து இருக்கிறார். மேலும், தன்னுடைய பிறந்தநாள் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, இவ்வளவு நன்றாக கவனித்துக் கொள்ளும் சுகாதார நிறுவனத்தை சேர்ந்த அனைவருக்கும் எங்களுக்கு கடவுள் போன்றவர்கள்.

வரலக்ஷ்மி பதிவிட்ட பதிவு:

இந்த அழகான குழந்தைகளுடன் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றேன். நாம் நம் வாழ்க்கையை பற்றி குறை கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு இந்த குழந்தைகளை நினைத்து பாருங்கள். புற்றுநோயால் தப்பி பிழைத்தவர்கள். அவர்கள் முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டு அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் மத்தியில் ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆக உணர்கிறேன். நோயை எதிர்த்து போராடும் அனைத்து சக்தியையும் கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். இந்த பிறந்த நாளை சிறப்பாக மாற்றிய என்னுடைய தாயார் சாயாதேவிக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

Advertisement