தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்துவரும், வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இப்போது அவரது திருமணம் குறித்த தகவல்கள் தான் இணையதளத்தில் பரவி வருகிறது. தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார் வரலட்சுமி. அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.
மேலும் இவருடைய நடிப்பில் தமிழில் வி3, கன்னித்தீவு, கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஏஜென்ட் கோட்டபொம்மாளி போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படங்கள் எதுவுமே இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயரை எடுத்து தரவில்லை. அடுத்த வருடம் இவர் பல படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் :
இந்நிலையில், வரலட்சுமிக்கும், மும்பையை சேர்ந்த நிக்கோலாய்க்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரலட்சுமியால் ‘நிக்’ என செல்லமாக அழைக்கப்படும் இவருடன் வரலட்சுமிக்கு பல ஆண்டுகள் பழக்கமாம்.ஆனால் எந்த ஒரு இடத்திலும் தங்களைப் பற்றிய செய்திகள் வெளி வராத படி எப்படி இருவரும் பார்த்துக் கொண்டார்களோ தெரியவில்லை. நிக் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.
இதனை தொடர்ந்து இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நிக்கோலா யின் முதல் திருமணம் மற்றும் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் எதிர்மறையான விமர்சனங்களை வைக்க, அவற்றிற்கு ரொம்ப மெச்சூர்ட்டாக வரலட்சுமி, “என்னுடைய அப்பாவும் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர் தான். அவர் மகிழ்ச்சியாக இல்லையா? அதனால இதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை. நிக்கின் தோற்றம் பற்றி மத்தவங்க பேசறது எல்லாம் எனக்கு முக்கியமில்லை. எனக்கு அவர் அழகானவர் எனவும் எங்களுடைய ரிலேஷன் குறித்து நெகடிவ் கமெண்ட்ஸ் சொல்றவங்களை பற்றியும் கவலை இல்லை” என பதில் அளித்துள்ளார்.
வரூவின் திருமண தேதிகள் குறித்து:
இந்நிலையில் நிச்சயதார்த்தம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட இவர்களது திருமண தேதி குறித்து கிடைத்த தகவலின் படி வரும் ஜூலை மாதம் இரண்டாம் தேதி இவர்களது திருமணம் தாய்லாந்தில் நடக்கவிருக்கிறதாம்.மேலும் நிக்கோலாய்,”பாலிவுட் நட்சத்திரங்களின் ஸ்டைலில் திருமணத்தை டெஸ்டினேஷன் மேரேஜாக நடத்த ஆசைப்பட்டதனால், வரூவும் இந்த ஐடியாவுக்கு ஓ.கே சொல்ல தாய்லாந்தைப் புக் செய்திருக்கிறார்களாம். சமீப காலங்களில் உலகின் பல பகுதிகளில் இருந்து காதல் ஜோடிகள் தாய்லாந்துல திருமணம் செஞ்சுக்க விருப்பப்பட்டு வராங்க. நீண்ட அழகான கடற்கரைகள், பிரம்மாண்டமான அரண்மனைகள், உலக பிரசித்தி பெற்ற தாய் உணவு முதலான அம்சங்கள் இந்த காதலர்களை ஈர்க்கறதாச் சொல்றாங்க.
மற்ற நிகழ்ச்சிகள் குறித்து:
இந்நிலையில் தாய்லாந்தில் நடக்கும் திருமணத்திற்கு நிக் மற்றும் வருவின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்வார்களென தெரிகிறது. மேலும் திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி நிகழ்ச்சி சென்னை தாஜ் நட்சத்திர ஹோட்டலிலும், திருமணத்திற்கு பின்னர் வரவேற்பு சென்னையில் லீலா பேலஸ் மற்றும் இன்னொரு நட்சத்திர ஓட்டலிலும் நடக்கவிருக்கிறதாம். ஆக மொத்தத்தில் திருமணத்தின் போது நடக்கும் அழகிய தருணங்களை வரவேற்க தயாராகிவிட்டார் வரலட்சுமி சரத்குமார்.