அட்ஜஸ்ட் செய்ய சொன்னாங்க.என்னிடம் ஆதாரம் இருக்கு. ஷாக் கொடுத்த வரலக்ஷ்மி.

0
2917
varalakshmi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காலம் காலமாக தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து உள்ளார். மேலும், விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்தில் வில்லியாக கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

-விளம்பரம்-
Image result for varalakshmi sarathkumar angry

- Advertisement -

இந்த இரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. தற்போது இவர் ‘சேசிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமா நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவம் தனக்கும் நடந்து உள்ளது என்று நடிகை வரலட்சுமி அவர்கள் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, தமிழ் சினிமா உலகில் மிகவும் தைரியம் மிகுந்தவர்களாகவும், என்ன நடந்தாலும் வெளிப்படையாக பேசக்கூடியவர்களில் ஒருவர் நடிகை வரலட்சுமி.

இதையும் பாருங்க : சனம் ஷெட்டி சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும் தர்ஷனுக்கு பிக்பாஸ் மூலம் கிடைத்த பரிசு.

-விளம்பரம்-

தன் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் கூட இவர் சோசியல் மீடியாவில் பேசியுள்ளார். நடிகை வரலட்சுமி அவர்கள் பெண்கள் மீதான பல அவலங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார். me too என்ற அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து உள்ளார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி தன்னை படுக்கைக்கு அழைத்த சம்பவம் குறித்து இவர் பேட்டியில் கூறியிருப்பது, தனக்கும் சினிமா உலகில் பல பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் நான் வைத்து உள்ளேன்.

Image result for varalakshmi sarathkumar angry

குறிப்பாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் கூட தவறு ஏற்படுவது வேதனை அளிப்பதாக இருக்கிறது. படங்களில் நடிக்க வேண்டுமென்றால் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறும் கேட்டார்கள். அப்படியே செய்ய மறுத்தால் சினிமா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை என்றேன். இப்படி இவர்கள் பேசிய ஆடியோ பதிவு வைத்து உள்ளனேன். தற்காப்புக்காக பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அது தான் முக்கியமான ஒன்று. எல்லாம் முடிந்த பின் புகார் அளிப்பது, கண் கலங்குவது இதில் எந்த ஒரு புரோஜனம் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

Advertisement