உன்மேல இருந்த மரியாதை போயிடுச்சி.! விஷால் வெளியிட்ட விடியோவால் கடுப்பான வரலக்ஷ்மி.!

0
961
Varalakshmi
- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். நடிகர் நாசரை எதிர்த்து தலைவர்பாதைக்கு  பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் வருகிற நடிகர் சங்கத் தேர்தலுக்காக விஷால் சார்பான பாண்டவர் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதனை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் நடிகர் சங்கத்தில் முன்னாள் தலைவர்களாக இருந்த சரத் குமார் மற்றும் ராதாரவியை மறைமுகமாவும் நேரடியாகும் கடுமையாக தாக்கி பேசியுள்ளனர்.

- Advertisement -

அந்த வீடியோவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சரத் குமார் மற்றும் ராதாரவி தலைவர்களாக இருந்த போது அவர்களின் சுய நலத்தால் துணை நடிகர் முதல் நாடக நடிகர்கள் வரை சிரமத்திற்கு உள்ளார்கள் என்றும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கேட்ட கேள்விக்கு பதில் வராததால் தான் விஷால் தேர்தலில் நிற்கும் சூழல் வந்ததாகவும் அந்த வீடியோவில் காட்சியாக்கபட்டுள்ளது.

மேலும், குறையான ஓய்வூதியம், நிர்வாகிகளிடம் குறைகளை சொல்லும் தைரியம், உறுப்பினர்களுக்கு காப்பீடு வசதி என அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் பழமைமிக்க இந்த சங்கம் இருந்தது. இந்த சுழலில் தான் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி உருவாக்கபட்டது என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்த விடியோவை கண்ட சரத் குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார், விஷாலை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சங்க தேர்தலுக்காக நீங்கள் சமீபத்தில் வெளியிட்ட விடியோவை கண்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். இவ்வளவு கீழ்தரமாக இருப்பீர்கள் என்று நான் எண்ணி பார்க்கவில்லை. என் தந்தயை நீங்கள் மட்டமாக பேசி இருக்கிறீர்கள். இதனால், நீங்கள் ஏதோ துறவி போல எண்ணி விட வேண்டாம்.

எப்போதும் நான் உங்களிடம் ஒரு நல்ல தோழியாக இருந்துளேன். ஆனால், இப்போது உங்கள் மீதிருந்த மரியாதையை போய் விட்டது. நல்ல விதத்தில் செய்லபடுவதை விட்டுவிட்டு இப்படி கீழ் தரமாக பிரச்சாரத்தை செய்வதை பார்க்கையில் நான்பாவப்படுகிறான். திரைப்படத்திலாவது நீங்கள் நல்ல நடிகராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement