ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’ படம் எப்படி இருக்கு ? -முழு விமர்சனம் இதோ.

0
1211
jeeva
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜீவா. சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியான காபி வித் காதல் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவா நடித்திருக்கிறார். இந்த படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஜீவா உடன் காஷ்மிரா, பிரக்யா, வி டிவி கணேஷ், கே எஸ் ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இளைஞர்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்று வெளியாக இருக்கும் ஜீவாவின் வரலாறு முக்கியம் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஜீவா அவர்கள் கோயம்புத்தூரில் சொந்தமாக youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய தந்தை கே எஸ் ரவிக்குமார் மற்றும் தாயார் சரண்யா பொன்வண்ணனுடன் வசித்து வருகிறார். ஜாலியான குறும்புத்தனமான பையனாக இருக்கிறார். இவருடைய தெருவிற்கு கேரளாவில் இருந்து அக்கா தங்கை காஷ்மிரா மற்றும் பிரக்யா தன்னுடைய குடும்பத்துடன் வந்து குடியேறுகின்றனர். காஷ்மிராவின் அப்பா தன்னுடைய மகளை துபாய் மாப்பிள்ளைக்கு கட்டி கொடுக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளுடன் இருக்கிறார்.

- Advertisement -

படத்தின் கதை:

ஆனால், ஜீவாவிற்கு காஷ்மிராவின் மீது ஒருதலையாக காதல் வருகிறது. பின் இருவருமே காதலிக்க தொடங்குகிறார்கள் .இறுதியில் இருவரும் இணைந்தார்களா? இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதித்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை. எஸ்எம்எஸ் படத்திற்கு பிறகு ஜீவா உடைய துள்ளலான நடிப்பு இளைஞர்களை கவர்ந்திருக்கிறது. எப்போதுமே பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் ஜீவாவின் தோற்றம் இந்த கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது.

நடிகர்கள் குறித்த தகவல்:

அவருடைய இயல்பான நடிப்பின் மூலம் காதலிலும், காமெடியிலும் கலக்கியிருக்கிறார். சொல்லப்போனால் எஸ்எம்எஸ் பட ஜீவாவை மீண்டும் பார்த்தது போலவே இருக்கிறது. இவரை அடுத்து காஷ்மிரா அழகாகவும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாகவும் செய்திருக்கிறார். பிரக்யாவிற்கு இது முதல் படமாக என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், படத்தில் ஜீவா மற்றும் வி டி வி கணேசன் இடைய நடக்கும் காமெடி கலாட்டாக்கள் எல்லாம் திரையரங்களில் கிளாப்ஸ், விசில்களையும் தெறிக்க விட்டிருக்கிறது.

-விளம்பரம்-

பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக பொருந்தி இருக்கிறது. கதை பெரியதாக இல்லை என்றாலும் காமெடியாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் காமெடி போர்சன்களும் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. சில இடங்களில் மட்டும் தான் சலிப்பைத் தட்டி இருக்கிறது. மற்றபடி பெரிதாக போரெல்லாம் இல்லை. ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை கலகலப்பாகவே படம் சென்று கொண்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவாவின் ஒரு சூப்பரான படமாக வரலாறு முக்கியம் அமைந்திருக்கிறது.

நிறை:

ஜீவாவின் நடிப்பு அசத்தல்

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

இரண்டாம் பாதி காமெடி காட்சிகள் எல்லாம் பட்டையை கிளப்பி இருக்கிறது

ஜீவா மற்றும் வி டிவி கணேஷ் காம்போ சிறப்பாக இருக்கிறது

இளைஞர்களைக் கவரும் விதமாக படம் இருக்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்.

இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் சுவாரசியம் கொடுத்திருந்தால் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும்.

மற்றபடி பெரிதான குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் ஜீவாவின் வரலாறு முக்கியம்- நிலைத்து நிற்கும்.

Advertisement