இன்று வெளியான வாரிசு படத்தை முதல் நாளே விமர்சனம் செய்து வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.
ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.
அதிலும் அஜித்தின் வலிமை படத்தை குறித்து இவர் தாறுமாறாக பேசி இருந்ததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொந்தளித்து ப்ளூ சட்டை மாறனை திட்டி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகி இருக்கும் வாரிசு படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை. நகரில் மிகவும் பெரிய தொழிலதிபராக இருக்கிறார் சரத்குமார். அவருக்கு ஸ்ரீகாந்த் ,ஷாம், விஜய் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் இருவருமே அப்பா பேச்சை மீறாமல் நடக்கும் பொம்மைகள் போல இருந்து வருகிறார்கள்.
VAARISU Review – https://t.co/WDMzIvkHuE
— Blue Sattai Maran (@tamiltalkies) January 11, 2023
ஆனால், விஜய் மட்டும் தன்னுடைய கனவு லட்சியம் தான் முக்கியம், தனக்கான அடையாளத்தை தானே உருவாக்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய நிர்வாகப் பொறுப்பை சரத்குமார் விஜய்யிடம் ஒப்படைக்க அதை அவர் ஏற்க மறுப்பதால் அவரை வீட்டை விட்டு வெளியேற சொல்லுகிறார் சரத்குமார்.வீட்டை விட்டு வெளியேறும் விஜய் தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார்.
பின்னர் ஒரு கட்டத்தில் தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் சரத்குமார் சொந்த குடும்பத்தில் செய்த சூழ்ச்சிகளால் தொழிலில் சறுக்களை சந்திக்கிறார். இப்படி ஒரு நிலையில் விஜய் மீண்டும் வீட்டிற்கு வர தன்னுடைய தொழிலை மீண்டும் விஜய பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பின்னர் சரத்குமாரின் தொழில் ஏன் நஷ்டம் அடைந்தது ? குடும்பத்தினர் செய்த சதி என்ன ? அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன ? சரத்குமாரின் தொழில் சாம்ப்ராஜியத்தையே விஜய் மீண்டும் மீட்டெடுத்து வந்தாரா என்பது தான் மீதிக்கதை.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை வெளியிட்டு இருக்கும் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை கழுவி ஊற்றி இருக்கிறார். இந்த படத்தின் முதல் குழப்பமே இது குடும்ப கதையா ? இல்ல ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்ளும் ஒரு மசாலா கதையா என்ற குழப்பம் நமக்கு முன் படக்குழுவிற்கு வந்துவிட்டது. இந்த படத்தில் பாடலும் சரியில்லை டான்ஸ்சும் சரியில்லை. படத்தின் கிளைமாக்ஸ்ஸில் பிரகாஷ் ராஜை இந்த படம் இந்த படம் வெளியான போது இது சீரியல் மாதிரி இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால், இது மெகா சீரியல் இல்லை, தமிழில் டப்பிங் செய்யப்பட்ட தமிழ் மெகா சீரியல் என்று வாரிசு படத்தை கலாய்த்து இருக்கிறார்.