பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி இருக்கிறது. ஜில்லா மற்றும் வீரம் வெளியாகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் ஒரே நேரத்தில் மோத இருக்கின்றன. விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர்.
கதைக்களம் :
நகரில் மிகவும் பெரிய தொழிலதிபராக இருக்கிறார் சரத்குமார். அவருக்கு ஸ்ரீகாந்த் ,ஷாம், விஜய் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் இருவருமே அப்பா பேச்சை மீறாமல் நடக்கும் பொம்மைகள் போல இருந்து வருகிறார்கள். ஆனால், விஜய் மட்டும் தன்னுடைய கனவு லட்சியம் தான் முக்கியம், தனக்கான அடையாளத்தை தானே உருவாக்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய நிர்வாகப் பொறுப்பை சரத்குமார் விஜய்யிடம் ஒப்படைக்க அதை அவர் ஏற்க மறுப்பதால் அவரை வீட்டை விட்டு வெளியேற சொல்லுகிறார் சரத்குமார்.
வீட்டை விட்டு வெளியேறும் விஜய் தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் சரத்குமார் சொந்த குடும்பத்தில் செய்த சூழ்ச்சிகளால் தொழிலில் சறுக்களை சந்திக்கிறார். இப்படி ஒரு நிலையில் விஜய் மீண்டும் வீட்டிற்கு வர தன்னுடைய தொழிலை மீண்டும் விஜய பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பின்னர் சரத்குமாரின் தொழில் ஏன் நஷ்டம் அடைந்தது ? குடும்பத்தினர் செய்த சதி என்ன ? அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன ? சரத்குமாரின் தொழில் சாம்ப்ராஜியத்தையே விஜய் மீண்டும் மீட்டெடுத்து வந்தாரா என்பது தான் மீதி கதை.
நிறை :
படத்தில் விஜயின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும்மேனரிசம் ரசிகர்களை நிச்சயம் கவரும். கில்லி திரைப்படத்திற்கு பின்னர் ஒரு துருதுருவான விஜயை பார்க்க முடிந்தது.
படம் முழுவதும் விஜய் தான் நிறைந்து இருக்கிறார் இது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ட்ரீட்டாக அமையும்
முதல் பாதி கடகடவென சென்றுவிடுகிறது.
படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகவும் அற்புதமாக இருந்தது.
விஜய் மற்றும் யோகி பாபு ஆகிய இருவருக்கும் காமெடி இந்த படத்தில் கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
குறைகள் :
படத்தின் முக்கிய குறை என்றால் அது நீளம் தான் அதுவும் இரண்டாம் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.
பல படங்களில் கண்டது போல கிளைமாக்ஸ்ஸில் விஜய் வில்லனை பேசியே திருத்திவிடுகிறார்.
ராஷ்மிகா இந்த படத்தில் சம்யுக்தாவை விட கொஞ்சம் கூடுதுலாக வசனம் பேசி இருக்கிறார். பாடலுக்கு மட்டும் அவரை பயன்படுத்தி இருக்கின்றனர்.
படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே நம்மால் கணிக்க முடிந்துவிடுகிறது.
படத்தில் வரும் சண்டை காட்சிகள் தெலுங்கு படங்களை ஞாபகபடுத்துகிறது. விஜய் ஒரு காட்சியில் 50 பேரை அடிப்பது எல்லாம் ஓர்.
இறுதி அலசல் :
சமப காலமாக நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை மனதில் வைத்து படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இதனால் தொடர்ந்து ஆக்சன் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஒரு முழு குடும்ப திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.விஜய் அஜித்திற்கு விசுவாசம் திரைப்படம் எந்த அளவிற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்ததோ, அதேபோல வாரிசு திரைப்படம் குடும்ப ரசிகர்களை திரையரங்கிற்கு கூட்டி வரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.