உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா, பிகில் படம் குறித்து பிகில் பட நடிகை போட்ட ட்வீட்டால் கடுப்பான ரசிகர்கள்.

0
479
- Advertisement -

இந்தியாவில் எப்படி கிரிக்கெட்டை கொண்டாடுகிறோமோ அந்த அளவிற்கு அண்டை நாடுகளில் கால்பந்திற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த வாழ்கையில் உலகக்கோப்பை கால்பந்து 2022ல் கடந்த ஒரு மாதமாக 32 அணிகள் மோதிக்கொண்ட இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் அர்ஜின்ட்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது உலக மக்கள் அனைவரும் இறுதி போட்டி நடக்கும் கர்த்தரில் உள்ள லுசைல் ஐகானிக் மைதானத்தை உற்று நோக்கி கொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

90 நிமிடங்கள் கடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் 2-2 என்ற நிலையில் இருந்தனர். இதனால் கூடுதல் 30 நிமிடங்க்ள கொடுக்கப்பட்டது. கூப்டுத்தலாக கொடுக்கப்பட்ட நேரத்தில் இரண்டு அணிகளும் தலா 3-3 என்ற நிலையில் இருக்க போட்டியை முடிவுக்கு கொண்டு வர பெனால்டி ஹிட் அவுட் முறை கொண்டு வரப்பப்பட்டது. இதில் அர்ஜென்டினா 4ற்கு 4 கோல்கள் அடிக்க , பிரான்ஸ் அணி 2 மட்டுமே அடித்து தோல்வியடைந்த நிலையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இதையும் பாருங்க : படத்தில் பயன்படுத்திய பொருளை பிக் பாஸ் பிரபலத்துக்கு கொடுத்துள்ள அஜித் – விலை எவ்ளோ தெரியுமா ?

அர்ஜென்டினா அணி கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து 3வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதில் லீக், நாக் அவுட், காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டி என 5 போட்டிகளிலும் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை அர்ஜென்டினாவை சேர்ந்த லயோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். அதோடு இறுதியில் கோல் அடித்த என்சொ பெர்னான்டஸ்க்கு சிறந்த இளம் வீரர் என்ற பட்டமும், அர்ஜென்டினா அணிக்கு அரண் போல நின்று அர்ஜெடினாவை காப்பாற்றிய மார்டினெஸ்க்கு சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை வழக்கப்பட்டது.

-விளம்பரம்-

அதோடு தனி வீரராக உலக கோப்பை கால்பந்து 2022ல் 8 கோல்களை அடித்த பிரான்ஸ் அணியை சேர்ந்த எம்பாப்பே விற்கு தங்க காலணிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டியின் நாயகனான லயோனல் மெஸ்ஸி 3 தங்க பதக்கங்களை வென்றார். இந்நிலையில் அர்ஜென்டினா அணிக்கும் ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “ப்ரிம் வீடியோஸ் இந்தியா” தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அர்ஜென்டினா அணி வெற்றியடைந்ததற்கு நடிகர் விஜய் தான் காரணம் என்று பதிவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்திருந்த “பிகில்” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இப்படமானது வெளியானதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடி வரை வசூலித்திருந்தது. அதே சமயம் இந்த படத்தில் கால் பந்து விளையாட்டுகள் லாஜிக் இல்லாமல் காட்டப்பட்டது என்று கேலிகளும் எழுந்தது.

அதுவும் குறிப்பாக வீட்டில் இருந்தே விளையாட்டு உடையை அணிந்து சென்ற வர்ஷாவின் கதாபாத்திரம் பெரும் கேலிக்கு உள்ளானது. இப்படி ஒரு நிலையில் அர்ஜென்டினா அணி உலக கோப்பையை கைப்பற்றி இருக்கும் நிலையில் வர்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிகில் படத்தை நினைவுகூறுகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் வர்ஷாவின் இந்த பதிவை கேலி செய்து வருகின்றனர்.

Advertisement