பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் இவர் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.
லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதனால் லாஸ்லியா ஆர்மிக்கு இணையாக ஹேட்டர்ஸ்களும் இருந்து வருகின்றனர்.
அதிலும் கடந்த இரண்டு நாடளுக்கு முன்பு முகேன், லாஸ்லியவை வடிவேலுவுடன் ஒப்பிட்டு பேசியது லாஸ்லியாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் லாஸ்லியா மற்றவர்களிடம் எல்லாம் தன்னை ஒப்பிட்டு மட்டம் தட்ட வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார் இதனால் வடிவேலுவின் ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவை கழுவி ஊற்றிவருன்றனர்.
இதனால் கடுப்பாகியுள்ள வடிவேலு ரசிகர்கள் லாஸ்லியாவை எல்லாம் வடிவேலுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்றும், முகென், உன்னை சாய் பல்லவி போல இருக்கிறாய் என்று சொல்லும் போது ஏற்றுக்கொண்ட நீ வடிவேலுவுடன் ஒப்பிட்டு பேசும் போது மட்டும் ஏன் மட்டம் தட்டுவதாக கூறுகிறாய் என்றெல்லாம் லாஸ்லியாவை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க லாஸ்லியா எந்த டாஸ்க்கிலும் ஈடுபடுவது இல்லை என்றும் எப்போது கேமரா மீது தான் கவனம் செலுத்துகிறார் என்றும் டாஸ்க் என்று வந்துவிட்டால் கூட அவர் அதனை சரியாக செய்வதில்லை என்றும் ரசிகர்கள் லாஸ்லியா மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால் லாஸ்லியா மீது ரசிகர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு ஏற்பட்டு வருகிறது.