கிரிக்கெட் வீரர்கள் பலர், சினிமாவில் நடித்துள்ளனர். சடகோபன் ரமேஷ, ஹர்பஜன் சிங், இர்பான் பதான் என்று பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் பலர் கிரிக்கெட்டிற்கு பின் சினிமாவில் நடிகர்களாக களமிறங்கினார்கள். இதில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் நடித்து வரும் ‘பிரிண்ட்ஷிப்’ படத்திலும் இர்பான் பதான் விக்ரமின் ‘கோப்ரா’ படத்திலும் நடித்து வருகிறார். இவர்கள் எல்லாம் கிரிக்கெட்டில் நிழந்த பின்னர் தான் சினிமாவில் நடிகர்களாக களமிறங்கினார்கள். ஆனால், தற்போது கொல்கத்தா அணியில் விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி Ipl போட்டிகளில் விளையாட வரும் முன்னரே சினிமாவில் நடித்துள்ளார் அதுவும் கிரிக்கெட் சம்மந்தபட்ட படத்தில் நடித்துள்ளார்.
நடப்பு ஆண்டின் பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் வீரர்களின் செயல்பாடுகள் அதிக அளவில் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் தற்போது கொல்கத்தா அணியை சேர்ந்த வீரரான வருண் சக்கரவர்த்தி கையிலுள்ள விஜய்யின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஆவார்.
கிரிக்கெட் மீது உள்ள காதலை தாண்டி அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது சமீபத்தில் தான் தெரியவந்தது. மேலும் அதன் அடையாளமாய் வருண் சக்ரவர்த்தி தனது இடது கையின் தோள்பட்டையில் தலைவா படத்தில் விஜய் கை தூக்கி திரும்பி நிற்கும் படி இருக்கும் டிரேட்மார்க் போஸை டேட்டூவாக குத்தியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் Ipl போட்டிகளில் விளையாடும் முனரே விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ஜீவா’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழில் கடந்த 2014ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ‘ஜீவா’ இந்த படத்தினை சுசீந்திரன் இயக்கி இருந்தார். மேலும், இந்த திரைப்படம் கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் தயாரிக்கப் பட்டிருந்தது. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி, சுரபி, சார்லி போன்ற பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் வரும் சக்கரவர்த்தி ஃபிளாஷ்பேக் காட்சியில் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.