மாஸ்டர் டீசருக்கு பின் விஜய்யை சந்தித்து, படத்தில் வந்தது போல போஸை கொடுத்து புகைப்படம் எடுத்த வருண் சக்ரவர்த்தி.

0
458
varun
- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவருக்கு சினிமாவையும் தாண்டி பல்வேறு துறைகளிலும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரரான வருண் சக்கரவர்த்தியும் விஜய்யின் தீவிர ரசிகர் தான் என்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடைபெற்று முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி சார்பாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விளையாடினார். 

-விளம்பரம்-

தினேஷ் கார்த்திக் தலைமையின் கீழ் விளையாடிய இவர் அவரின் புரிதலோடு தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 13 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகளையும் ஒரே போட்டியில் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கிரிக்கெட் மீது எவ்வளவு காதல் இருக்கிறதோ அதே போன்று தமிழ் நடிகர் விஜயின் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார். விஜயின் தீவிர ரசிகரான அவர் தனது இடது கையின் தோள் பட்டையில் தலைவா படத்தில் இருக்கும் ட்ரேட் மார்க் போசை தனதுகையில் டேட்டூ போட்டுள்ளார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது விஜய் ரசிகர்களால் இணையத்தில் அந்த புகைப்படம் வைரலானது. மேலும் ஒருமுறை பாஸ்கி உடன் நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது விஜய் சாரை எப்படியாவது சந்திக்க வேண்டும். உங்களால் முடிந்தால் உதவுங்கள் என்று என்று சொல்லி இருந்தார். இந்நிலையில் தற்போது வருண் சக்கரவர்த்தியின் அந்த கனவு நனவாகியுள்ளது. சமீபத்தில் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து வரும் சக்கரவர்த்தி மாஸ்டர் டீசர் விஜய் சேதுபதி மற்றும் விஜயின் கைகள் நேருக்குநேர் ஒட்டிக்கொள்ளும் காட்சியில் தோன்றுவது போல ஒரு போஸ் கொடுத்து விஜய்யுடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வரும் சக்கரவர்த்தி, உள்ள வந்தா பவருடி.! அண்ணன் யாரு ? தளபதி என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், தினேஷ் கார்த்திக் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து Fan Boy Movemnt என்று பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement