‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இருந்து வசந்த் வசி விலகியதற்காக கூறிய காரணம் தான் தற்போது இணையத்தில் வைரக்கப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’. அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, விஜே கதிர், வெங்கட், ஆகாஷ், ஹேமா உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.
சீரியலில் பாண்டியன் தன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்ப்பாராத விதமாக காதல் திருமணம் நடந்து விடுகிறது. இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். பின் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்க மயிலை திருமணம் செய்து வைக்கிறார். தங்க மயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்கள் நடக்கிறது.
சீரியல் ட்ராக்:
தற்போது சீரியல் மூத்த மகன் சரவணனையும், மருமகள் தங்க மயிலையும் ஹனிமூன் போக பாண்டியன் சொல்கிறார். அதற்கு சரவணன் தனது தம்பிகளையும் ஹனிமனுக்கு அனுப்ப வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் பாண்டியன் அதற்கு மறுக்கிறார். இதனால் வீட்டில் பாண்டியனுக்கும், மனைவி கோமதிக்கும் சில சண்டைகள் நடக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் வெங்கட் கதாபாத்திரத்தில், முதலில் வசந்த் வசீதான் நடித்திருந்தார். அதாவது பாண்டியனின் இரண்டாவது மகன் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வசந்த் வசி விலகல்:
சமீபத்தில் அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதால், தற்போது நடிகர் வெங்கட் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அந்த சீரியலில் இருந்து விளக்கத்திற்காக நடிகர் வசந்த் வசி காரணம் கூறியுள்ளார். அதில், நடிகர் வசந்த் வசிக்கு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக தான் சீரியல் இருந்து விலகினேன் என்று கூறியுள்ளார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:
மேலும், அவர், நான் சீரியலில் இருந்து விலகியதற்காக நிறைய வதந்திகள் பரவி வருகின்றது. அவை எதுவுமே உண்மை இல்லை. பின் எனக்கும் நடிகை ஹேமாவிற்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும். எனக்கும் ப்ரொடக்ஷன் டீமுக்கும் நிறைய பிரச்சனை இருப்பதாகவும் வதந்திகள் பரவுகிறது. அவை எதுவுமே உண்மை கிடையாது. பட வாய்ப்புகள் வருவதால் தான் சீரியலில் இருந்து விலகினேன். இது முழுக்க முழுக்க நான் எடுத்த முடிவுதான் என்று கூறியுள்ளார்.
வசந்த் வசி குறித்து:
அதைத் தொடர்ந்து, அவர் இப்போதைக்கு படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தப் போவதாகவும். சீரியலில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். நடிகர் வசந்த் வசி, பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 1 சீரியலிலும் பிரசாந்த் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியில் கலந்து கொண்ட வசந்த் வாசி, சமீபத்தில் தான் போட்டியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியேறினார் என்பது நாம் அறிந்ததே.