தான் படித்த பள்ளிக்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ள வசந்த பாலன் – மேஜையில் கிறுக்கப்ட்ட அவரின் உண்மையான பெயர் இதோ.

0
292
- Advertisement -

தனது பள்ளிப் பருவ நினைவுகளை குறித்து பேஸ்புக் பக்கத்தில் வசந்தபாலன் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வசந்தபாலன். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். பின் இவர் 2003 ஆம் ஆண்டு ஆல்பம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் வெயில் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த படத்தில் பரத்,பசுபதி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்திருந்தது. இதனை அடுத்து இவர் அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

வசந்தபாலன் திரைப்பயணம்:

மேலும், இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தற்போது வசந்தபாலன் அவர்கள் இயக்கியிருக்கும் படம் அநீதி. இந்த படத்தின் கதை, திரைக்கதை அனைத்துமே வசந்தபாலன் எழுதி இருக்கிறார். மேலும், இந்த படத்தை அவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

அநீதி படம்:

இந்த படத்தின் மூலம் தான் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விளம்பர பணிகளில் இயக்குனர் வசந்த பாலன் ஈடுபட்டு வருகிறார்.

-விளம்பரம்-

வசந்த பாலன் பதிவு:

அந்த வகையில் இவர் விருதுநகர் சென்றிருக்கிறார். அங்கு அவர் தான் படித்த பள்ளிக்கு சென்று தன்னுடைய பள்ளிப்பருவ நினைவுகளை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அநீதி திரைப்படத்தின் விளம்பர படப்பிடிப்பிற்காக விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 34 வருடங்களுக்கு பிறகு சென்றேன். பள்ளி மாணவனாக மனம் மெல்ல மாற துவங்கியது. நான் அமர்ந்த வகுப்பு மேஜையில் அமர்ந்திருந்தேன்.

பள்ளிப்பருவ அனுபவம் குறித்து சொன்னது:

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கிறுக்கல்களோடு என் கிறுக்கலும் மேஜையை அலங்கரித்தது. காலை பிரார்த்தனை கூடம், நூலகம், விளையாட்டு மைதானம், சைக்கிள் ஸ்டாண்டு என பல்வேறு இடங்களில் என்னை தேடியலைந்தேன். என் காலடி தடங்களை, என் வாசத்தைத் தேடி தேடி காணக் கிடைக்காமல் பள்ளிப்படிக்கட்டுகளில் சோர்வாய் அமர்ந்தேன். 12ம் வகுப்பு வரை படித்த பாலமுருகனைக் காணவில்லை. வசந்தபாலன் சார் ஒரு தன் படம் (செல்ஃபி) என்று ஒரு மாணவன் என்னிடம் கேட்டப்போது, “நான் வசந்த பாலன் இல்ல G.பாலமுருகன் பிளஸ் டூ கணக்கு தமிழ்ப்பிரிவு” என்றேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement