ஆர் ஜே பாலாஜியின் ‘வீட்ல விஷேசம்’ எப்படி இருக்கிறது – முழு விமர்சனம் இதோ.

0
877
veetla
- Advertisement -

இயக்குனர் என்.ஜே. சரவணன் மற்றும் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் வீட்ல விசேஷம். இந்த படத்தில் சத்யராஜ், ஊர்வசி, ஆர் ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படம் தான் வீட்ல விசேஷம். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியான வீட்ல விசேஷம் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ரயில்வே ஊழியராக சத்யராஜ் நடித்திருக்கிறார். இவருடைய மனைவி ஊர்வசி. மகன்கள் ஆர் ஜே பாலாஜி, விஷ்வேஷ். ஆர் ஜே பாலாஜி ஆசிரியராக பணிபுரிகிறார். பள்ளியின் நிறுவனர் மகளாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள். பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் போது ஆர்ஜே பாலாஜி தன்னுடைய தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.

இதையும் பாருங்க : சிவராத்திரியில் மிஸ் ஆன சமந்தாவின் ஆட்டத்தை சமீபத்தில் போட வைத்த சத்குரு – வைரலாகும் வீடியோ.

- Advertisement -

மேலும், ஊர்வசியின் கர்ப்பத்தால் ஆர்.ஜே.பாலாஜி காதலுக்கு விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் ஆர்.ஜே பாலாஜி தாயின் கர்ப்பத்தை ஏற்றுக்கொண்டாரா? அபர்ணா பாலமுரளி உடன் இணைந்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர் ஜே பாலாஜி தன்னுடைய வழக்கமான காமெடி, கிண்டல் கலந்த நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகளில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

பெற்றோர்கள் மீது கோபப்படுவது, பாசத்தை புரிந்து கொள்வது என நடிப்பில் பாராட்டை வாங்கி இருக்கிறார் பாலாஜி. கதாநாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்திற்கு பெரிய பலமாக இருந்தது சத்யராஜ், ஊர்வசி. பல காட்சிகளில் இவர்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தன் அம்மாவை சமாளிப்பது, மனைவியை அரவணைப்பது என எல்லா இடங்களிலுமே சத்யராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார்.

இதையும் பாருங்க : சிவராத்திரியில் மிஸ் ஆன சமந்தாவின் ஆட்டத்தை சமீபத்தில் போட வைத்த சத்குரு – வைரலாகும் வீடியோ.

-விளம்பரம்-

ஊர்வசியின் நடிப்புக்கும் பஞ்சம் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்து இருக்கிறார்கள். கஷ்டமான காட்சியில் கூட சாதாரணமாக நடித்திருக்கிறார்கள். 50 வயதில் கர்ப்பமடைவது வேறு நோக்கத்தில் பார்க்கப்பட்டாலும் அதில் இருக்கும் காதல், பாசம், உணர்வு என அனைத்தையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர். பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்காமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி திரைக்கதையை இயக்கி இருக்கிறார்.

நிறைகள் :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஊர்வசி. சத்யராஜின் நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பக்கா என்டர்டைன்மென்ட் படமாக இருக்கிறது.

இயக்குனர் திரைக்கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு.

குறைகள் :

50 வயதில் கர்ப்பம் ஆவது குறித்து தான் கேள்வி.

ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள்

மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு குறைகள் இல்லை.

பணம் கொடுத்து சென்ற ரசிகர்களின் காசு வீண் போகவில்லை என்று சொல்லலாம். படம் முழுக்க முழுக்க காமெடி, சென்டிமென்ட் பாணியில் அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் வீட்ல விசேஷம் எல்லோரும் வாழ்த்தி செல்கிறார்கள்

Advertisement